வவுனியா, செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இன்று (09) மதியம் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
செட்டிகுளம் - மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பழைய புகையிரத நிலையம் முன்பாக வீதியோரத்தில் சீமெந்து கற்களை அடுக்கி சுமார் ஒன்றரை அடி உயரமுடைய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு வந்த சில நபர்கள் கற்களை அடுக்கி புத்தர் சிலையை வைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த பகுதியில் தமிழ் மக்களே பூர்வீகமாக வாழ்ந்து வருவதுடன், குறித்த சிலை வைக்கப்பட்ட இடத்திற்கு அண்மித்ததாக செட்டிகுளம் முருகன் கோவில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM