சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் அவை பொதுமக்களுக்கு அவை உரிய முறையில் சென்றடையவில்லை எனும் முறைப்பாடு அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து இன்று (09) நாடளாவிய ரீதியில் இந்த தேசிய பரிசோதனை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வர்த்தக வாணிப அமைச்சின் பணிபுரையின் பெயரில். மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட நுகர்வோர் அதிகார சபை இணைந்து. இந்த பரிசோதனைநடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது மட்டக்களப்பு பொதுச்சந்தை வியாபார நிலையங்களில். உரிய முறையில் அளவீட்டு அலகுகள் நியமங்களை பேணாத வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதன் போது மரக்கறி கடைகள். அத்தியாவசியபொருட்கள் வியாபார நிலையங்கள். உடுதுணி கடைகள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
உரியமுறையில் அளவீட்டு நியமனங்களை பேணாத ஆறு வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. வர்த்தக வாணிப அமைச்சின் அளவீட்டு அலகுகள் நியமனங்கள் திணைக்கள மட்டு அம்பாறை உதவி அத்தியட்சகர். விநாயகமூர்த்தி விக்னேஸ்வரன் தலைமையில் இந்த பரிசோதனை. நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM