புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை தோற்கடிக்க ஆளுந்தரப்பினரும் ஆதரவளிப்பர் - தயாசிறி

Published By: Nanthini

08 Apr, 2023 | 08:37 PM
image

(எம்.மனோசித்ரா)

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மோசமானது. இதனை எதிர்க்கும் ஜனநாயகத்தை மதிக்கும் ஆளுந்தரப்பு உறுப்பினர்களும் உள்ளனர்.

அவர்களையும் இணைத்துக்கொண்டு, சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை தோல்வியடைச் செய்வோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் சு.க.வின் நிலைப்பாடு குறித்து வினவியபோது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தினை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். 1979இல் தயாரிக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை விட மோசமானதாக இந்த சட்டமூலம் காணப்படுகிறது. 

இதன் ஊடாக ஊடகங்கள் மற்றும் எந்தவொரு ஆர்ப்பாட்டத்தினையும் முடக்கும் அதிகாரம், எந்தவொரு நபரையும் கைதுசெய்வதற்கும், தடுத்து வைப்பதற்கும் ஜனாதிபதிக்கு காணப்பட்ட அதிகாரம் சகல சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரஜைகளை துன்புறுத்தக்கூடிய நிலைமையும் ஏற்படும். 

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் சகல மாவட்டங்களிலும் 90 நாட்கள் தடுத்து வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும். எனவே, இதனை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். சர்வாதிகார ஆட்சியை நாட்டில் ஏற்படுத்தவே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளோம். இவ்வாறு எழுந்துள்ள எதிர்ப்புக்களின் காரணமாகவே அரசாங்கம் ஓர் அடியைப் பின்வைத்துள்ளது. 

அரசாங்கத்திலும் இந்த சட்ட மூலத்தினை எதிர்க்கும் சிலர் உள்ளனர். அவர்களையும் இணைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இதனை பாராளுமன்றத்தில் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

அரசாங்கத்துடன் இணைவதற்கு சுதந்திர கட்சிக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்படுமானால், அதற்கு எமது ஆதரவை வழங்கத் தயார். இதனை சு.க. தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே தெரிவித்துள்ளார். மாறாக, ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்துக்குச் சென்று அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதை அனுமதிக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18
news-image

வற் வரியை நீக்குமாறும் மீன்பிடியை ஊக்குவிக்குமாறும்...

2025-02-14 17:29:15
news-image

இணையத்தளம் மூலம் 29 இலட்சம் ரூபா...

2025-02-14 19:03:13
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த...

2025-02-14 16:51:12
news-image

பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத்திட்டங்களை...

2025-02-14 17:21:03
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத்...

2025-02-14 16:58:28
news-image

நானுஓயாவில் வீடொன்றில் தாழிறங்கிய நிலம்! -...

2025-02-14 16:49:29
news-image

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக கல்லேல்லே...

2025-02-14 16:55:18
news-image

வடக்குக்கான இரவு தபால் ரயில் சேவை...

2025-02-14 16:53:18
news-image

தையிட்டி விவகாரம் : மீண்டும் இனவாதம்...

2025-02-14 16:58:29