(எம்.மனோசித்ரா)
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி திருத்தக் கொள்கையை அரசாங்கம் உடன் மீளப் பெற வேண்டும் என்பதோடு, இதனால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு அடுத்த வாரம் முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை குறித்து திங்கட்கிழமை அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய திங்கட்கிழமை மேல் மாகாண நுண்கலை நிலையத்தில் பிற்பகல் 2.30 க்கு சகல தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர் தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவற்றை இணைந்து சம்மேளனமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்மேளனத்தில் எதிர்வரும் தினங்களில் வரிக் கொள்கைக்கு எதிராக எவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்பது குறித்து அறிவிக்கப்படவுள்ளது.
பல்கலைக்கழக பேராசிரியங்கள் சங்க சம்மேளனம், தொழிலாளர்கள் போராட்ட மத்திய நிலையம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் , தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம், அகில இலங்கை முகாமைத்துவ அதிகாரிகள் சங்கம், தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு மத்திய நிலையம், தொழிற்சங்க கூட்டமைப்பு, இலங்கை மின்சாரசபை ஒருங்கிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு உள்ளிட்டவை இணைந்து இந்த சம்மேளனத்தை ஏற்பாடு செய்துள்ளன.
அத்தோடு இந்த சம்மேளனத்தில் வைத்தியர்கள், தாதியர், நீர் வழங்கல், வங்கி, துறைமுகம், விவசாய சங்கங்கள், மாணவர் சங்கங்கள் உள்ளிட்டவையும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.
கடந்த மார்ச் மாதம் வரிக் கொள்கையை மீளப் பெறுமாறு வலியுறுத்தி தொழிற்சங்கங்களினால் வாராந்தம் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அரசாங்கத்தினால் ஸ்திரமான தீர்மானமொன்று வழங்கப்படவில்லை.
இந்நிலையிலேயே அடுத்த கட்டமாக எவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது குறித்து அவை நாளை தீர்மானிக்கவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM