மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மரப்பாலம், புல்லுமலை, கரடியனாறு போன்ற பிரதேசங்களில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து, கடந்த 2 மாதங்களில் சுமார் 20 வீடுகளை உடைத்துள்ளதோடு, பல ஏக்கர் பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.
எனவே, இந்த யானைகளிடம் இருந்து மனித உயிர்களை பாதுகாத்துத் தருமாறு கோரி, பிரதேச பொது அமைப்பினர் உதவி அரசாங்க அதிபரிடம் நேற்று வியாழக்கிழமை (6) கோரிக்கை விடுத்துள்ளனர்.
உதயம் கமநல அமைப்பு, சின்ன புல்லுமலை மரண உதவிச் சங்கம், மரப்பாலம் கமநல அமைப்பு, சின்ன புல்லுமலை கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள் ஒன்றிணைந்து, யானைகளில் இருந்து மனித உயிர்களை காப்பாற்றித் தருமாறு கோரி மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் வைத்து, உதவி அரசாங்க அதிபர் தர்ஷினியிடம் மகஜரை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
செங்கலடி - பதுளை ஏ5 பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதேசங்களில் உள்ள குடிமனைகளுக்குள் காட்டு யானைகள் உட்புகுந்து வீடுகளை உடைத்து, சேதப்படுத்துவது மற்றும் பயிர்ச் செய்கைகளை அழித்து வருகிறது. இதனால் பிரதேச மக்கள் தினந்தினம் உயிரை பணயம் வைத்து, அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் சிறுவர்களும் பயத்தின் மத்தியிலேயே ஒவ்வொரு இரவுப் பொழுதுகளையும் கழித்து வருவதாக அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,
இந்த பிரதேசங்களை சேர்ந்த பல குடும்பங்களின் ஜீவனோபாய தொழில் விவசாயம் ஆகும். பலர் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுபவர்களாக உள்ளனர்.
இந்நிலையில் காட்டு யானைகள் குடிமனைகளுக்குள் புகுந்து வீடுகளை உடைத்து துவம்சம் செய்வதுடன், பயிர்களையும் அழித்துள்ளன. தென்னை, பலா போன்ற மரங்களை முறித்துள்ளன.
யானை தாக்குதலுக்கு உள்ளாகி கடந்த 3 மாதங்களில் 3 பேர் உயிரிழந்ததுடன், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்வாறு தினந்தோறும் இரவு பகலாக யானைகளின் அட்டகாசத்தினால் கால்நடைகளை வளர்ப்போரும், அந்த பகுதி வழியே போக்குவரத்தில் ஈடுபடுவோரும் பாடசாலை மற்றும் தனியார் வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களும் மிகுந்த அச்சத்தில் காணப்படுகின்றனர்.
மேலும், பராமரிப்பற்ற நிலையில் உள்ள காணிகள் மற்றும் பற்றைக் காடுகளில் பகல் வேளைகளில் யானைகள் தங்குகின்றன. எனவே, அந்த பற்றைக்காடுகளை வெட்டி துப்புரவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், அந்த காட்டு யானைகளை வன விலங்கு அதிகாரிகள் மூலம் காட்டுக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த பகுதியில் வன விலங்கு பாதுகாப்பு திணைக்கள காரியாலயம் ஒன்றை அமைத்து, யானைகளிடமிருந்து எமது உயிர்களையும் பயிர்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை கையளித்துள்ளோம்.
இந்த கோரிக்கைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்று திட்டங்களை செயற்படுத்துவதாக உதவி அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளார் என அமைப்பினர் தமது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM