தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மிகுந்த கவலையளிக்கிறது: மு.க.ஸ்டாலின் கடிதம்

Published By: Rajeeban

07 Apr, 2023 | 04:32 PM
image

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றமை மிகுந்த கவலையளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே தமிழக முதலமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

கிழக்கு கோடியக்கரை பகுதியில் கடந்த 5 ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் சிலரின் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

இந்த சம்பவத்தில் நான்கு மீனவர்களுக்கு கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்குள்ளான மீனவர்களுக்கு சொந்தமான ஏழு தொலைபேசிகளை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, இந்த விடயத்தை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், இந்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் வசமுள்ள மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை அமைச்சர் மேற்கொள்ள வேண்டுமெனவும் தனது கடிதத்தின் மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கோரிக்கை விடுத்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13
news-image

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி...

2025-03-14 13:56:27
news-image

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.....

2025-03-14 13:24:45
news-image

புகையிரதத்தின் மீது பிரிவினைவாதிகளின் தாக்குதலிற்கு இந்தியா...

2025-03-14 12:53:23
news-image

டென்வர் விமானநிலையத்தில் அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில்...

2025-03-14 10:20:32
news-image

பாக்கிஸ்தானில் பணயக்கைதிகளாக பிடிபட்ட புகையிரத பயணிகளைமீட்கும்...

2025-03-13 14:40:20
news-image

போதைப்பொருளிற்கு எதிரான போரின் போது கொலைகள்...

2025-03-13 13:03:48
news-image

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஸ்யா நிபந்தனைகளை...

2025-03-13 10:17:40
news-image

''ஆர்பிஜியொன்று புகையிரதத்தின் இயந்திரத்தை தாக்கியது அதன்...

2025-03-12 17:32:53
news-image

கொரியாவில் நெருக்கடி : ஆசியாவுக்கான ஜனநாயக...

2025-03-12 21:07:58