மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் புனித வெள்ளி ஆராதனைகள் இன்று (7) இடம்பெற்றன.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகளை சஹ்ரான் ஹாசிமின் தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் குறிவைத்து, தற்கொலை குண்டுதாரிகளால் தாக்குதல் நடத்தி, நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் படுகாயமடைந்தனர்.
இவ்வருடம் யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பெரிய வெள்ளி எனப்படும் புனித வெள்ளியான இன்றைய தினத்தில் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெறுகின்றன.
அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆராதனைகள் இடம்பெற்றன. இதில் பெருந்திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை நாளை மறுதினம் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 'உயிர்த்த ஞாயிறு' தினம் அனுஷ்டிக்கப்படும் வரை தேவாலயங்களில் இடம்பெறும் ஆராதனைகளின்போது தொடர்ந்து பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM