மட்டக்களப்பு கரடியனாறு கித்துள் ஆற்றில் சட்டவிரோதமாக மண் அகழ்வு
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ்பிரிவிலுள்ள கித்துள் ஆற்றில் சட்டவிரோதமாக இரவில் மண் அகழ்ந்து எடுத்து அந்த பகுதியில் குவிக்கப்பட்ட 15 கீப் கொண்ட ஆற்று மணலை இன்று வெள்ளிக்கிழமை (7) மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான இன்று காலை கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஷhர தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த மண் குவிக்கப்பட்ட இடத்திற்கு சென்றனர்.
இதன் போது மண்மாபியாக்கள் ஆற்றில் மண் அகழ்வாற்கு அனுமதி இல்லாத நிலையில் இரவு வேளைகளில் ஆற்றில் இருந்து மணல்களை அகழ்ந்து இரவேடு இரவாக இந்த பகுதியில் குவித்துவிட்டு பின்னர் மண்யாட்டில் இருந்து மண் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரம் உள்ள வாகனத்தில் மண்ணை ஏற்றி கொண்டும் செல்லும் சட்டவிரோத நடவடிக்கையினை மண்மாபியாக்கள் செய்துவருவதாகவும் அதன் ஒரு செயற்பாடுதான் இந்த மண்ணை அகழ்ந்து குவிக்ப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அங்கு சுமார் 15 கீப் கொண்ட மண் குவிக்ப்பட்டுள்ளதுடன் எவரும் இதற்கு அனுமதி கோராத நிலையில் இருந்துள்ளதையத்து அந்த மணல்களை பொலிசார் மீட்டு அதனை கனரக வாகனங்களில் இதனையடுத்து ஏற்றிச் சென்று பொலிஸ் நிலையத்தில் குவிக்கப்பட்டு அதனை நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM