ரயில் பயணிகள் மீது தீவைத்த விவகாரம்: ஒருவர் கூறியதால்தான் இதை செய்தேன் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Published By: Rajeeban

07 Apr, 2023 | 11:39 AM
image

கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீவைத்த குற்றவாளியை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கேரளாவில் ஓடிக் கொண்டிருந்த ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்,  முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் என்.ஐ.ஏ. உட்பட புலனாய்வுத் துறை அதிகாரிகள் குற்றவாளி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயிலானது கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் ரயில் நிலையம் அருகே இரவு 9.37 மணிக்கு வந்து கொண்டிருக்கும் போது D1 பெட்டியில் நடந்து வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

இதனால் அலறியடித்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய நேரத்தில் ரயிலில் இருந்து அந்த நபர் வெளியே குதித்து தப்பி ஓடினார். பிற பயணிகள் இதுகுறித்து ரயில்வே போலீசார் மற்றும் எலத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார், தீக்காயம் அடைந்த பயணிகளை மீட்டு கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டதில் ரயில் தண்டவாளம் அருகே ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் மற்றும் ஆண் சடலம் தீ காயங்களுடன் கண்டெடுக்கபட்டது. மேலும் ஆய்வு செய்ததில் ரயில்வே தண்டவாளத்தில் பேக் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் ஒரு மொபைல் போன், பெட்ரோல் நிறைந்த ஒரு பாட்டில் மற்றும் ஒரு டைரி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

போலீஸ் விசாரணையில், அந்த டைரியில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் உட்பட சில ஊர்களின் பெயர்கள், கோடுகள், சில காவல் நிலைய பெயர்கள் எழுதப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் தீவிரவாதிகள் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீவிரவாத தடுப்புபிரிவு அதிகாரிகள், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் கேரளா மாநில காவல்துறை டிஜிபி அனில் காந்த் உட்பட அதிகாரிகள் விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து சந்தேகத்தின் பெயரில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ஒருவரை கேரள மாநில புலனாய்வுத்துறை காவல்துறையினர் தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஓடும் ரயிலில் தீ வைத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றவாளியான ஷாருக் சைபி என்பவரை மகாராஷ்டிரா மாநிலம் ரத்தின கிரி பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஷாருக் சைபி, மகாராஷ்டிரா மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகச் சென்றிருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஷாருக் சைபியை விசாரித்ததில், ஒருவர் கூறியதின் அடிப்படையில் தான் இதை இந்த குற்ற செயலை செய்தேன். இவ்வாறு செய்தால் நன்மை நடக்கும் என அவர் கூறினார், அது தான் இந்த குற்ற செயலில் ஈடுபட்டேன். டெல்லியிலிருந்து ரயிலில் கோழிகோடு வந்து அங்கிருந்து இறங்கி பெட்ரோல் பங்கு சென்று மூன்று பாட்டில் பெட்ரோல் வாங்கி விட்டு மற்றொரு ரயிலில் ஏறினேன்.

தொடர்ந்து அங்கு அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு இரு பெட்டிகள் மாறி வந்து அமர்ந்திருந்தேன் என விசாரணையின் போது ஷாருக் சைபி கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவ்வாறு செய்ய தூண்டியது யார் என்ற கேள்விக்கு பதில் இல்லை எனவும் கூறப்படுகின்றது.

இதனை அடுத்து, ஷாருக் சைபி ஐ கேரள மாநிலம் கோழிகோடு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில்,  இது  திசை திருப்பும் முயற்சியா ? அல்லது இவர் மன நோயாளியா ? இவர் கூறிய அந்த நபர் யார் எனவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறுதி உயிர்த்த ஞாயிறு செய்தியில் காசாவின்...

2025-04-21 16:56:43
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் நித்திய இளைப்பாற்றுதல்...

2025-04-21 14:46:10
news-image

சிறுமியைக் கொன்ற சிங்கம்

2025-04-21 13:04:51
news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2025-04-21 12:12:11
news-image

மீண்டும் அதே தவறை செய்தார் அமெரிக்க...

2025-04-21 11:54:12
news-image

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன்...

2025-04-20 13:15:31
news-image

ஈக்குவடோரில் சேவல் பந்தயத்தில் பார்வையாளர்கள் மீது...

2025-04-20 12:46:18
news-image

மன்னர்கள் தேவையில்லை 'அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு...

2025-04-20 09:58:13
news-image

அவுஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த கடலலைகள் தாக்கி ...

2025-04-20 10:13:22
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; வட இந்தியா,...

2025-04-19 14:11:35
news-image

இந்தியாவில் இடிந்து விழுந்த மாடிக் கட்டிடம்...

2025-04-19 11:09:47
news-image

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா...

2025-04-19 10:01:20