வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு

Published By: Digital Desk 5

07 Apr, 2023 | 11:25 AM
image

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழ விற்பனை  அதிகரித்துள்ளன.

குறிப்பாக சம்மாந்துறை - அம்பாறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று, பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி   மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் கொண்டு வந்து  விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் இவ்வெள்ளரிப்பழத்தினை கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இம் மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற  வரட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள உடல் உஷ்ணத்தை தவிர்ப்பதற்காக இவ்வெள்ளரிப்பழம் உட்பட ஏனைய பழ வகைகளை சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் கொண்டு வருகின்றனர்.

இது தவிர தற்போது அதிக வெப்பம் காரணமாக  அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திற்க்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன் 150 ரூபாய் முதல் சுமார் 850  ரூபாய் வரை இவ் வெள்ளரிப்பழம்  சிறியது முதல் பெரியது வரையான பருமனுக்கேற்ப  விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மேற்குறித்த இப்பழ வகையானது  பெரும்பாலும் வெப்பமான  காலங்களிலேயே அதிகமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றமை  இங்கு குறிப்பிடத்தக்கது .

பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம், செங்கலடி, களுதாவளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருமளவில் வெள்ளரிப்பயிர்ச்  செய்கை பண்ணப்பட்டு வருவதுடன் இவைகள்  ஏனைய ஊர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றது. 

பனைஓலையில்  மிக பாதுகாப்பாக வெள்ளரிப்பழத்தை  கட்டி  விற்பனையாளர்கள்  விற்பனை செய்து வருகின்றதுடன்  குறித்த வெள்ளரிப்பழங்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது ; மனித...

2026-02-17 19:55:04
news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57