இஸ்ரேலின் எல்லைப்பகுதியான ஜெருசலேம் நகரத்தில் இடம்பெற்ற வாகன தாக்குதலில் நான்கு இஸ்ரேலியப்படையினர் பலியாகியுள்ளதோடு 15 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது 

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு எதிரான போராட்டங்கள் மிக நீண்டகாலமாகவே இடம்பெற்ற வருகின்றன. அத்தோடு அண்மைக்காலமாக பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிப்பிற்குட்பட்ட ஜெருசலேம் பகுதிகளில் இஸ்ரேல் கட்டாய குடியேற்றத்திட்டங்களை முன்னெடுத்து வந்தது. 

இந்நிலையில் ஜெருசலேமில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய படையினர் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த தாக்குதல்தாரி பாரவூர்தி வாகனத்தை மோதச் செய்துள்ளார்.

குறித்த தாக்குதலினால் 4 படையினர் சம்பவ இடத்திலே பலியானதோடு 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் தாக்குதல்தாரி படையினரால் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

 

மேலும் கடந்தாண்டில் மாத்திரம் சுமார் 39 இஸ்ரேலிய படையினர் (இரண்டு அமெரிக்க படையினர் அடங்கலாக) பாலஸ்தீனர்களால் கொள்ளப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதலினால் ஏற்பட்ட பதில் தாக்குதல்களில் சுமார் 229 பாலஸ்தீனர்கள் கொள்ளப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.