11,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் விமானி ஆசனத்தில் நாகபாம்பு

Published By: Sethu

06 Apr, 2023 | 10:23 AM
image

பறந்துகொண்டிருந்த விமானத்தில் விமானியின் ஆசனத்தில் நாகபாம்பு ஒன்று காணப்பட்டதால், விமானமொன்ற அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

பீச்கிராப்ட் பரோன் 58 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் புளூம்பொன்டெய்ன் நகரிலிருந்து பிரிட்டேரியா நகரை நோக்கி பறந்துகொண்டிருந்தது. 4 பயணிகள் இவ்விமானத்தில் பயணம் செய்தனர். 

இவ்விமானம் 11,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, தனது முதுகுக்கும் ஆசனத்துக்கும் இடையில் ஏதோ பொருள் இருப்பதை விமானி ருடோல்வ் இராஸ்முஸ் உணர்ந்தார். அது ஒரு தண்ணீர் போத்தலாக இருக்கும் என அவர் முதலில் எண்ணினாராம். 

ஆனால், இடது புறமாக கீழ்நோக்கி திரும்பிப் பார்த்தபோது, நாக காம்பை நான் கண்டேன். அது ஆசனத்தின் அடிப்பகுதியை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது என  விமானி இராஸ்முஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால், அது ஒரு நாக பாம்பு என்பதை உணர்ந்து அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார். இப்பாம்பு விமானத்தின் பின்பகுதிக்குச் சென்று பயணிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என விமானி எண்ணினார். 

தனது ஆசனத்தின் அடியில் பாம்பு இருப்பதால், விமானத்தை இயன்றவரை விரைவாக தரையிறக்கப் போவதாக பணிகளுக்கு விமானி அறிவித்தார்.

அதையடுத்து  ஊசி விழுந்தாலும் கேட்கக்கூடிய அளவுக்கு பயணிகளிடையே அமைதி நிலவியது என விமானி கூறியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்