ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள ஜமிலா சந்தைப் பகுதியில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் 13பேர் இறந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவந்ததாவது :

ஜமிலா சந்தைப் பகுதி வழியாக சந்தேகிக்கும் படி வந்த வாகனம் ஒன்றை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த படையினர் தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றதால் வாகனத்தின்மீது படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் வாகனத்தினுள் இருந்த தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த தற்கொலைக்குண்டை வெடிக்கச் செய்துள்ளார். 

குறித்த தாக்குதலில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 60 பேருக்கும் அதிகமானவர்கள் பலத்த காயங்களுடன் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.