மலைமகளாய் திருமகளாய் கலைமகளாய்
கம்பளை தரணியின் நிலமகளாய்
பரமனவன் சதியாய்
ரத்தின கல்பித சிம்மாசனமதில்
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய்
வீற்றிருந்து செங்கோல் புரியும்
ஸ்ரீ முத்துமாரியம்மை போற்றி போற்றி....!
சிவனவன் அகமதில் இடமமர்ந்து
இத்தரணி சிறக்க சீர்மேவும் நற்கருணைதனை
பார் முழுதும் வழங்கி
நின்னடியார் படுதுயர் நீக்கி வையத்தில்
மானிடர் இனமது வாழ்வாங்கு வாழ
இன்னருள் நல்கும்
ஸ்ரீ முத்துமாரியம்மை போற்றி போற்றி...!
புவி மாந்தர் மனங்களில்
பங்கு நீயென பங்குனி உத்தர நற்தினமதில்
பூரண பௌர்ணமி சுபத் திதியில்
என்றும் நிலையாய் அமர்ந்து
அருட்காட்சி நல்கும்
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி
ஸ்ரீ முத்துமாரியம்மை போற்றி போற்றி....!
சக்தியுடன் பரிவார கரகமதை
சித்தம் நிறைகொண்டு சீர்மேவும் மஹாவலி
கங்கைப் புனல் நிரப்பி மெய்யடியார்
பக்தி செய் 'கரகஸ்தாபனம்' கொண்டு
திருவிழாக் கோலமுடன் தினங்கள் பத்திலும்
நற்காட்கி நல்கும்
ஸ்ரீ முத்துமாரியம்மை போற்றி போற்றி....!
முல்லைப் பாலிகை தனையேந்தி
மழலையர் கும்மி நடனமுடன்
பழமை மாறா மஞ்சள் நீராட்டு
கலைகள் அழியாமல்
மலையகம் புகழ் பூத்த
திருநகராம் கம்பளை மாநகரம் காத்து
ரட்ஷிக்கும் காவல் தெய்வம்
ஸ்ரீ முத்துமாரியம்மை போற்றி போற்றி...!
- எஸ். கணேசன் ஆச்சாரி சதீஷ்,
(உபசெயலாளர் - ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், கம்பளை)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM