புத்தளத்தில் பீடி இலைகளை விற்பனை செய்ய முயற்சித்த சிலர் தப்பியோடியுள்ளதாகவும், அதேவேளை கொள்வனவு செய்ய வந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்றுள்ளது.
புத்தளம், பாலாவி, நாகவில்லு பகுதியில் நேற்று நண்பகல் வீடொன்றில் பொதி செய்யப்பட்ட பீடி இலைகளை லொறியொன்றில் ஏற்றுவதற்கு தயாராக இருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தம்பபண்ணி கடற்படைப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, கடற்படையினர் புத்தளம் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இவ்வாறு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பீடி இலைகளை விற்பனை செய்யவிருந்த சிலர் உரிய இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், பீடி இலைகளை கொள்வனவு செய்வதற்கு வந்திருந்த இருவரே கைதாகியுள்ளனர்.
கைதான இருவரும் ஹட்டன், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 44 பெட்டிகளில் அடைக்கப்பட்ட சுமார் 1157 கிலோ கிராம் 700 கிராம் பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் எனவும் கடற்படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியானவை என கூறப்படுகிறது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களுடன், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் பீடி இலைகளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட லொறியை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தம்பபண்ணி கடற்படைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் தொடர்ந்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM