இந்தியாவின் தலைநகர் புதுடில்லி ஏற்கனவே கற்பழிப்பு,காற்று மாசு மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்ற விடயங்களில் முதலிடத்தில் இருக்கிறது. இப்போது புதுமை என்ற பெயரில் பெண்களுக்கு மட்டும் பிரத்யோக மதுக்கடை திறந்துள்ளது.

புதுடில்லியில் உள்ள ஸ்டார் சிட்டி வியாபாரத்தொகுதியில் பெண்கள் மட்டும் பயன்படுத்தும் வகையிலான மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையில் அனைத்தும் பெண்கள் மயமாக காட்சியளிக்கின்றது. விற்பனையாளர் அவரது உதவியாளர் வாடிக்கையாளர் என அனைவரும் பெண்கள் மட்டுமே.

மெட்ரோ ரயிலில் பெண்களுக்கான தனி பெட்டியை டில்லியில் தான் முதன்முதலில் கொண்டுவரப்பட்டது. தற்போது பெண்களுக்கான முதல் மதுபானக்கடையும் இப்போது திறக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே புதுடில்லியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஆண்களுக்கு நிகராக குடிக்கும் வகையில் "பெண்களுக்கு மட்டும்" மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது பல்வேறு தரப்பு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.