2022 இல் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் இம்ரான் கான் வெளியேறியதைத் தொடர்ந்து, ஷேபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் பாகிஸ்தான் பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாத தாக்குதல்கள், பொருளாதார நெருக்கடி, குறைந்து வரும் அந்நிய செலாவணி இருப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான அச்சுறுத்தல்கள் போன்ற பல்வேறு நெருக்கடிகளில் சிக்கி இஸ்லாமாபாத் பாதிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதிக்கும் மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதால் நீதித்துறையும் மோதல்களை எதிர்கொள்கிறது. குறிப்பாக பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் அமைதியின்மை மற்றும் உறுதியற்ற தன்மை பிரதான காரணமாகிறது.
பாகிஸ்தானுக்கு உதவி செய்வதற்கான ஒப்பந்தத்தை சர்வதேச நாணய நிதியம் இன்னும் இறுதி செய்யவில்லை. ஆனால் அரசாங்கத்தின் மீது கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. உணவு, எரிவாயு மற்றும் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன, பணவீக்கம் வாரந்தோறும் சராசரியாக 47 வீதத்தை தாண்டுகிறது.
அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து, ஒரு வருடத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான பாக்கிஸ்தான் ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 75வீதம் வரை சரிந்துள்ளது. மறுப்புறம் அதிகரித்து வரும் அரசியல் உறுதியற்ற தன்மை காரணமாக சீனா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இஸ்லாமாபாத்திற்கு தங்கள் உதவியை மட்டுப்படுத்தியதால் பாகிஸ்தானும் இராஜதந்திர தனிமைப்படுத்தலை எதிர்கொள்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM