நேட்டோ அமைப்பில் பின்லாந்து நேற்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக இணைந்தது.
பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் அமைந்துள்ள நேட்டோ தலைமையகத்தில், பின்லாந்தின் கொடியை ஏற்றும் வைபவம் நேற்று நடைபெற்றது.
நேட்டோவில் அங்கத்துவம் பெற்ற 31 ஆவது நாடு பின்லாந்து ஆகும்.
வட அத்திலாந்திக் ஒப்பந்த அமையம் எனும் நேட்டோ (NATO) அமைப்பு 1949 ஏப்ரல் 4 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது. அதன் 74 ஆவது ஆண்டு நிறைவு தினத்தில், புதிய அங்கத்துவ நாடாக பின்லாந்து இணைந்துள்ளது.
ரஷ்யாவின் எல்லையிலுள்ள பின்லாந்து, நீண்டகாலமாக அணிசாரா கொள்கையை கடைபிடித்து வந்தது. எனினும் உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து, பின்லாந்தும் அதன் அயல்நாடான சுவீடனும் நேட்டோவில் இணைவதற்கு கடந்த மே மாதம் விண்ணப்பித்தன.
நேட்டோவில் பின்லாந்து இணைவதை அதன் 31 நாடுகளும் அங்கீகரித்தன. எனினும் சுவீடன் இணைவத்றகு துருக்கியும் ஹங்கேரியும் இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM