கலையரசன் நடிக்கும் 'புர்கா' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 5

05 Apr, 2023 | 01:32 PM
image

தமிழில் சிறந்த குணச்சித்திர நடிகரான கலையரசன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'புர்கா' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து அவர்களது இணையப்பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்தனர். 

'எச்சரிக்கை', 'ஐரா', 'பிளட் மணி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. எம். சர்ஜுன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'புர்கா'. இதில் கலையரசன், மிர்னா, சூரிய நாராயணன், ஜி. எம். குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. பாலமுருகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆர். சிவாத்மிகா இசையமைத்திருக்கிறார். இஸ்லாமிய மத பின்னணியிலான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ்கேஎல்எஸ் கேலக்ஸி மால் புரொடக்‌ஷன் மற்றும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் புரொடக்ஷன் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இந்த திரைப்படம் பட மாளிகையில் வெளியாகும் முன்பே சர்வதேச பட விழாக்களில் பங்கு பற்றி மூன்று விருதுகளை வென்றிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஏழாம் திகதியன்று 'ஆஹா' தமிழ் எனும் டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது முன்னோட்டத்தில் இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் பெண்களின் உணர்வுகள் மையப்படுத்தப்பட்டிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி'...

2025-03-19 16:02:24
news-image

வெற்றிகரமாக நிறைவடைந்த 'கூலி' திரைப்பட படப்பிடிப்பு

2025-03-19 16:06:28
news-image

இந்திய பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு...

2025-03-18 17:01:25
news-image

மீண்டும் திரையில் 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ்

2025-03-18 16:15:33
news-image

விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படத்தின் 'உருகுது...

2025-03-18 16:00:12
news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23