துருக்கிய அரசிற்கு எதிராக செயற்பட்ட குற்றத்திற்காக அரசு துறைசார் ஊழியர்கள் 8 ஆயிரம் பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
துருக்கிய ஜனாதிபதி ரெசிப் தாயிப் எர்டோகனுக்கு எதிராக கடந்தாண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட ஆட்சி கவிழ்ப்பு போராட்டங்கள் தோல்வியில் முடிந்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்ட சமீபத்திய அதிரடி நடவடிக்கைகளின் மூலம் சுமார் 8 ஆயிரம் அரச ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
அதில் காவல்துறையை சேர்ந்த உறுப்பினர்கள், சட்டத்துறை, சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறையை சேர்ந்த உயர் மற்றும் கடை நிலை அதிகாரிகள் உள்ளடங்களாக குறித்த அரச களையெடுப்புகள் நடந்துள்ளது.
துருக்கிய ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து அந்நாட்டில் அவசர நிலை சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரையிலும் சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் பேர்வரை துருக்கிய அரசு பணிநீக்கம் செய்துள்ளது.
குறித்த அரசுக்கெதிரான சதியில் 41000 பேர் கைது செய்யப்பட்டதோடு, அமெரிக்காவை சேர்ந்த இஸ்லாமியவாத மதகுருவான கிளேரிக் பெத்துல்லா குலன் மீது ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்காக செயற்பட்டதாக துருக்கிய அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. இருப்பினும் இக்குற்றச்சாட்டுக்களை அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM