அரச வங்கியொன்றின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (ஏடிஎம்) உள்ள பணத்தினை கொள்ளையிட முற்பட்ட நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவுவேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.