பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை மே மாதம் நடத்த பாக் உச்சநீதிமன்றம் உத்தரவு

Published By: Sethu

05 Apr, 2023 | 11:02 AM
image

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டமன்றத் தேர்தலை மே மாதம் நடத்த வேண்டும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இத்தேர்தலை தாமதிப்பதற்கான முயற்சியை நீதிமன்றத்தின் உத்தரவு தடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கானின் ஓர் அரசியல் வெற்றியாக இது கருதப்படுகிறது.

இம்ரான் கான் தலைமையிலான பிரிஐ கட்சியின் மத்திய அரசாங்கம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் கவிழ்க்கப்பட்டது. 

அதன்பின் விரைவாக பொதுத்தேர்தலை நடத்துமாறு இம்ரான் கான் வலியுறுத்தி வருகிறார்.

பிரிஐ கட்டுப்பாட்டிலிருந்த பஞ்சாப், கைபர் பக்துன்கவா மாகாண அரசாங்கங்களையும் இம்ரான் கான் கலைக்கச் செய்தார். 

பாகிஸ்தானின் அரசியலமைப்பின் படி இச்சட்டமன்றங்களுக்கு 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 

ஆனால், தேர்தலுக்கான நிதியின்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கூறி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை இத்தேர்தலை ஒத்திவைப்பதற்கு பாகிஸ்தரின் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தது. ஒக்டோபர் மாதம் பாராளுமன்ற பொதுத்தேர்தலும் நடத்தப்படவுள்ளது. 

இந்நிலையில், பஞ்சாப் மாகாண சட்டமன்ற தேர்தல் தாமதிக்கப்படுவது அரசியலமைப்புக்கு முரணானது, 90 நாட்களுக்கு மேல் தேர்தல் திகதி நீடிக்கப்பட முடியாது என பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் (சுப்ரீம் கோர்ட்) நேற்று தெரிவித்தது.

மே 14 ஆம் திகதிக்குள் இத்தேர்ததலை நடத்துமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

நீதிமன்றம், பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்கவா மாகாண தேர்தல்களை நடத்துவதற்காக 21 பில்லியன் பாகிஸ்தான்  ரூபா நிதியை ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் வழங்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு உத்தரவிட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி :...

2025-04-24 07:18:18
news-image

துருக்கியை தொடர்ச்சியாக தாக்கியுள்ளபூகம்பங்கள் - சேதவிபரங்கள்...

2025-04-23 16:37:49
news-image

துருக்கியில் பூகம்பம்

2025-04-23 16:12:35
news-image

ரஸ்யாவில் ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளில்...

2025-04-23 14:57:29
news-image

காஷ்மீர் தாக்குதல்: திருமணம் நடந்து 3...

2025-04-23 14:52:20
news-image

பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கைகளிற்காக மாணவர்களை தடுத்துவைத்திருப்பது...

2025-04-23 14:03:20
news-image

பஹல்கம் பயங்கரம் -மனைவி குழந்தைகள் கண்முன்னே...

2025-04-23 12:54:37
news-image

ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்:...

2025-04-22 20:58:16
news-image

உயர்கல்வியில் தலையிடுவதை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தவேண்டும்...

2025-04-22 12:36:12
news-image

பாப்பரசர் பிரான்ஸிஸ் மறைவு ;  வத்திக்கானுக்கு...

2025-04-22 11:24:51
news-image

இலங்கையின் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் பாப்பரசராக...

2025-04-22 10:52:35
news-image

அமெரிக்காவில் தீப்பிடித்து எரிந்த விமானம்

2025-04-22 09:25:56