அமெரிக்க எல்லையில் மெக்சிகோ சட்டவிரோத செயற்பாட்டாளர்களின்  ஊடுருவலை தடுக்க அமரிக்கா கட்டும் சுவரிற்கான செலவை மெக்சிகோவே செலுத்த வேண்டும் என அடுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க எல்லையில் மெக்சிகோ சட்டவிரோத செயற்பாட்டாளர்களின்  ஊடுருவலை தடுக்க,  தடுப்பு சுவரொன்று  கட்டப்படும் என ஜனாதிபதி தேர்தலின் போது டொனால்டட் டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில் மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டுவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் குடியரசு கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக அமெரிக்க  செய்தி நிறுவனமொன்றிற்கு டிரம்ப் பேட்டி அளித்துள்ளார். அதில் தான் தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டப்படும். நாட்டின் வரி செலுத்தும் நிறுவனம் மூலம் இந்த சுவர் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சுவர் கட்டுவதற்கான செலவு முழுவதையும் மெக்சிகோ, அமெரிக்காவுக்கு திருப்பி தர வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை தேர்தல் பிரச்சாரத்தில் வலியுறுத்தியதோடு, மெக்சிகோ ஜனாதிபதி என்றிக்கு பெனாநியோட்டோவை சந்தித்த போதும் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.