டெல்ஹியை 5 விக்கெட்களால் வீழ்த்தி 2ஆவது வெற்றியை சுவைத்தது நடப்பு சம்பியன் குஜராத்

05 Apr, 2023 | 06:22 AM
image

(நெவில் அன்தனி)

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக டெல்ஹி, அருண் ஜய்ட்லி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (04) இரவு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் வெற்றியீட்டியது.

ராஷித் கான், அல்ஸாரி ஜோசப் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சும் சாய் சுதர்ஷன் குவித்த அபார அரைச் சதமும் டேவிட் மில்லரின் அதிரடியும் குஜராத் டைட்டன்ஸின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

டெல்ஹி கெப்பிட்டல்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 163 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 18.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 2023 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2ஆவது வெற்றியை சுவைத்த குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் இருக்கிறது.

டெல்ஹி கெப்பிட்டல்ஸைப் போன்றே குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை. அதிரடி வீரர்கள் ரிதிமான் சஹா (14), ஷுப்மான் கில் (14), அணித் தலைவர் ஹர்திக் பாண்டியா (5) ஆகிய மூவரும் களம் விட்டகல 6 ஓவர்கள்  நிறைவில் மொத்த எண்ணிக்கை 54 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் சார் சுதர்ஷனுடன் இணைந்த இம்பெக்ட் வீரர் விஜய் ஷன்கர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணியின் சரிவை கட்டுப்படுத்த முயற்சித்தார்.

சுதர்ஷனுடன் அவர் 4ஆவது விக்கெட்டில் 44 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மிச்செல் மார்ஷின் பந்துவிச்சில் ரிவியூ மூலம் எல்.பி.டபிள்யு. முறையில் ஆட்டம் இழந்தார். விஜய் ஷன்கர் 29 ஓட்டங்களைப் பெற்றார். (107 - 4 விக்.)

எவ்வாறாயினும் சாய் சுதர்ஷனும் டேவிட் மில்லரும் நம்பிக்கையுடன் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 29 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து குஜராத் டைட்டன்ஸின் வெற்றியை உறுதிசெய்தனர்.

மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சாய் சுதர்ஷன் 48 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார்.

மறுபக்கத்தில் அதிரடி கலந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் 16 பந்துகளில் 2 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகள் அடங்கலாக 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் பந்துவீச்சில் அன்ரிச் நோக்கியா 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

டெல்ஹி கெப்பிட்டல்ஸின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. 10ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 67 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த டெல்ஹி கெப்பிட்டல்ஸ் சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ப்ரித்திவ் ஷா (7), மிச்செல் மார்ஷ் (4), ரைலி ரூசோவ் (0), அணித் தலைவர் டேவிட் வோர்னர் (37) ஆகிய நால்வரும் முதல் 10 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர்.

துடுப்பாட்ட இம்பெக்ட் வீரர் சர்பராஸ் கான் (30), அபிஷேக் பொரெல் (20), அக்சார் பட்டேல் (36) ஆகியோர் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அணியின் வீழ்ச்சியை ஓரளவு கட்டுப்படுத்தினர்.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் சார்பாக 5ஆவது விக்கெட்டில் சர்பராஸ் கான், அபிஷேக் பொரெல் பகிரந்த 34 ஓட்டங்களே அதிகூடிய இணைப்பாட்டமாக பதிவானது.

உதிரிகளாக 11 வைட்களுடன் 15 ஓட்டங்கள் டெல்ஹிக்கு கிடைத்தன.

பந்துவீச்சில் ராஷித் கான் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் ஷமி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரபரப்புக்கு மத்தியில் மும்பை இண்டியன்ஸை கடைசி...

2025-03-24 02:56:34
news-image

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் இஷான் கிஷான்...

2025-03-23 21:38:21
news-image

18ஆவது IPL அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில்...

2025-03-23 10:26:39
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 60 மீற்றர்...

2025-03-22 04:00:36
news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-22 04:54:39
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11
news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தெரிவு...

2025-03-20 10:37:03