ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் சிறைக்கைதிகளாக உள்ள 285 பேருக்கு இன்று பொதுமன்னிப்பு வழங்கிவைக்கப்படவுள்ளது.

குறித்த விடயத்தினை சிறைச்சாலைகள் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிறிய குற்றங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

ஜனாதிபதி பதவியேற்று 2 வருடங்கள் பூர்த்தியாவதை கொண்டாடும் முகமாக இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.