ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஆட்சிப்பொறுப்பேற்று அதாவது ஐனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவை ஒட்டி முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை சேர்ந்த சுமார் 30 அங்கத்தவர்கள் மாஞ்சோலை பொதுவைத்தியசாலையில் உள்ள பிராந்திய இரத்த மத்திய நிலையத்தில் இரத்ததானம் வழங்கினார்கள்.

மேற்படி நிகழ்வு நேற்று காலை 9 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலை இரத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இதில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என சுமார் 30 பேர் இரத்தம் வழங்கியிருந்தனர்.

இதன்போது இரத்தவங்கியினுடைய பொறுப்பு வைத்தியர் ராஜித  சிறிவர்த்தன அவர்கள் சகல ஒழுங்குகளையும் மேற்கொண்டு இரத்ததானம் வழங்கியவர்களுக்கான தைத்திய அறிவுரைகளையும் வழங்கினார்.