IUCN உடன் கைகோர்த்து விலங்குகளை மீட்பதில் ஈடுபட்டுள்ள ஹொல்சிம் லங்கா

Published By: Priyatharshan

30 Dec, 2015 | 05:16 PM
image

இலங்கையைச் சேர்ந்த சூழலுக்கு பாதுகாப்பான சீமெந்து உற்பத்தியில் ஈடுபடும் ஒரே நிறுவனமான ஹொல்சிம் லங்கா, தொடர்ச்சியான 7 ஆவது ஆண்டாக விலங்குகளை மீட்கும் செயற்பாட்டை IUCN உடன் இணைந்து புத்தளம் கற்சுரங்கப்பகுதியில் முன்னெடுத்திருந்தது.

இலாபத்தை எய்துவதற்கு மேலதிகமாக, மக்கள் மற்றும் பூமிக்கு பெறுமதி சேர்ப்பது எனும் மும்முனை பின்பற்றல் முறைக்கமைவாக, உயிரியல் பரம்பலை பாதுகாத்து ஊக்குவிக்கும் வகையில் சூழல் பாதுகாப்புக்காக தனது பங்களிப்பை மேலும் அண்மையில் உறுதி செய்திருந்தது.

ஹொல்சிம் லங்கா நிறுவனத்தைச் சேர்ந்த நிலையாண்மை அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி சாலக பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில், “தொடர்ச்சியான 7 ஆவது ஆண்டாக இந்த விலங்குகளை மீட்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. உடனான எமது பங்காண்மை 2009 இல் ஆரம்பித்திருந்தது” என்றார்.

இதுவரையில் ஹொல்சிம் மொத்தமாக 8500க்கும் அதிகமான மெதுவாக நகரும் விலங்குகளை புலம்பெயர்க்க உதவியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு 2012 ஆம் ஆண்டு முதல் அதிகளவு வரவேற்பு கிடைத்திருந்தது. அதிகளவு தன்னார்வ செயற்பாட்டாளர்கள் முன்வந்திருந்ததன் மூலமாக வருடாந்தம் 2000க்கும் அதிகமான விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன. 

ஹொல்சிம் லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரி ஃபிலிப்பே ரிச்சர்ட் கருத்து தெரிவிக்கையில், “இந்த சூழலுக்கு நட்புறவான கலாசாரத்தை ஏனைய செயற்பாடுகளை விட முக்கியத்துவமானதாக நாம் கருதுகிறோம். இந்த விடயத்தில் பொறுப்பு வாய்ந்த கற்சுரங்க செயற்பாடுகள் மற்றும் எமது ஊழியர்களின் பொறுப்பான செயற்பாடுகள் ஆகியன பாராட்டுதலுக்குரியது” என்றார்.

உலகின் மிகப்பெரிய மற்றும் பழமைவாய்ந்த சூழல்சார் அமைப்பாக IUCN திகழ்கிறது. அத்துடன், நிலையாண்மை அபிவிருத்தி மற்றும் சூழல் தொடர்பான முன்னணி அதிகார சபையாக திகழ்கிறது. IUCN இன் அனுபவத்தை கருத்தில் கொண்டு, ஹொல்சிம் லங்கா, பின்வரும் நான்கு உயிரியல் பரம்பல் பிரிவுகளில் அதிசிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது.

பத்து கிலோமீற்றருக்கு உட்பட்ட பகுதிகளில் விலங்குகளை இடம்பெயரச் செய்து அவற்றுக்கு அவசியமான கூரைகள், உணவு மற்றும் வசிக்கும் சூழல் ஆகியவற்றை கொண்டுள்ளன. காப்பாற்றல் மற்றும் வெளிவிடுதல் செயற்பாடு என்பது அகழ்வுகள் இடம்பெற்ற பின்னர் மீள மேற்கொள்ளப்பட்டு அவற்றின் நகர்வுகள் அவதானிக்கப்படுகின்றன.

IUCN இன் நிகழ்ச்சி ஒழுங்கிணைப்பாளர் ஷாமென் விதானகே கருத்து தெரிவிக்கையில்,

“ஹொல்சிம் லங்கா உடனான பங்காண்மை என்பது அதிகளவு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். IUCN இலங்கையுடன் நீண்ட காலமாக கைகோர்த்து செயலாற்றி வரும் ஒரே தனியார் துறை நிறுவனமாக ஹொல்சிம் லங்கா திகழ்கிறது. IUCN நிபுணத்துடன் கைகோர்த்து, ஹொல்சிம் லங்கா சில உயர்ந்த பெறுபேறுகளை 2007ஆம் ஆண்டு முதல் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது” என்றார்.

ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட் பற்றி

சர்வதேச ரீதியில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் லபார்ஜ் ஹொல்சிம் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட் செயற்படுகிறது. பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை குடிமகன் எனும் வகையில், கம்பனி பொருளாதார, சமூக மற்றும் சூழல் சார் செயற்பாடுகளை நிலைபேறான அபிவிருத்திக்கமைய முன்னெடுத்து வருகிறது. 

இலங்கையில் புகழ்பெற்ற கீர்த்தி நாமத்தை பதிவு செய்துள்ள ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட், பல்வேறு சீமெந்து உற்பத்திகளை நாடு முழுவதும் வழங்கி வருகிறது. அத்துடன், ஹொல்சிம் புத்தாக்கம் மற்றும் அப்ளிகேஷன் நிலையத்தினூடாக தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்கி வருகிறது.  

இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான சீமெந்துக் கலவையை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். நாடு முழுவதும் பரந்தளவு காணப்படும் விநியோகஸ்த்தர் வலையமைப்பைக் கொண்டு தனது செயற்பாடுகளை நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.

“இலங்கையின் எதிர்காலத்துக்கான அத்திவாரங்களை கட்டியெழுப்புவது” எனும் தொனிப்பொருளுக்கமைய இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57