மூளையின் ஆரோக்கியத்தை பராமரிப்பது எளிதா ?

Published By: Vishnu

04 Apr, 2023 | 04:04 PM
image

இன்றைய திகதியில் மத்திம வயதுள்ளவர்களும், இளைய தலைமுறையினரும் பணியாற்றும் இடங்களில்... அவர்களின் மேல் அதிகாரிகளால் இலக்குகள் நிர்ணயிக்கப்படுவதால், ஓய்வின்றி உழைக்கிறார்கள்.

இதனால் இவர்களின் உறக்கம் பாதிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முக்கிய உறுப்பான மூளையின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.

மூளையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், ரத்தநாள கசிவு, ரத்த நாள அடைப்பு, மூளையில் கட்டி, நினைவுத்திறன் பாதிப்பு, தன்னிச்சையாக இயங்கும் செயல்களில் பின்னடைவு. போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். இதனால் மருத்துவர்கள் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது போல் மூளையின் ஆரோக்கியத்தையும் பிரத்யேகமாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

உடற்பயிற்சி, உணவு முறை, வாழ்க்கை நடைமுறை, உறக்கம், மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைப்பதற்கான பிரத்யேக பயிற்சி, சமுதாய நிகழ்வுகளில் பங்கு பற்றுதல் மற்றும் பங்களிப்பு, ரத்த நாளத்தின் ஆரோக்கியத்தை பிரத்யேகமாக பராமரித்தல் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.‌

நாளாந்தம் குறிப்பிட்ட நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்வதுடன் ஏரோபிக், தியானம், யோகா போன்ற பயிற்சிகளையும் செய்ய வேண்டும். மத்திம வயதிற்கு வந்த பிறகு உணவு முறையை ஒழுங்குப்படுத்திக் கொள்ள வேண்டும். நீரிழிவு, குருதி அழுத்த பாதிப்பு இருந்தால். அதனை அதற்குரிய சிகிச்சையைப் பெற்று கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

இன்றைய சூழலில் உடலியக்க சக்கரத்திற்கு எதிராக இளைய தலைமுறையினர் இரவு நேரத்தில் கண்விழித்து தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறார்கள்.

இதன் காரணமாக அவர்கள் உறக்கமின்மை பாதிப்பிற்கு ஆளாகி, அவர்களின் ரத்த நாளங மற்றும் அந்த ரத்த நாளத்திற்கான குருதியோட்டத்தில் பாரிய தடையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதன் காரணமாக உறக்கத்தை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அதிலும் அதிகாலை ஆழ்ந்த உறக்கத்தை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில் எம்முடைய உடலியக்க சக்கரம், இயல்பான நிலையிலிருந்து மாற்றம் பெற்று, இனம் கண்டறிய இயலாத பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். தினமும் குறைந்தபட்சம் ஆறு மணி தியாலத்திலிருந்து எட்டு மணி தியாலம் வரை இரவு நேரத்தில் உறங்குவதை ஆயுள் முழுவதும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஐம்பது வயதைக் கடந்தவர்கள்.. முதுமை பருவத்தை எட்டியவர்கள். தங்களது மூளையின் ஆரோக்கியத்தை பராமரிக்க புதிய மொழியினை கற்பது, இசை கருவியை பயிற்சி பெற்று இசைப்பது, அதிலும் குறிப்பாக காற்று இசைக்கருவிகள் எனப்படும் புல்லாங்குழல், நாதஸ்வரம், மவுத் ஆர்கான் போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதற்கான பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

இதனால் உங்களது மூளையின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு, அவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி, சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இயங்கும். வேறு சிலருக்கு விடுகதை புதிர்களை விடுவிப்பதிலோ அல்லது சூடோக்கு புதிர்களை விளையாடுவதிலோ ஆர்வம் காட்டலாம்.

முதுமையின் காரணமாக ரத்த நாளங்களின் இயங்குத்திறன் சோர்வடையலாம். இதனை துல்லியமாக உரிய பரிசோதனைகளின் மூலம் அவதானித்து, அதனூடாக பயணிக்கும் ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதற்குரிய பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மூளையில் உள்ள ரத்த நாளங்களில் ரத்தக் கசிவு, அடைப்பு போன்றவை ஏற்படுவதை தடுக்கலாம்.

நீங்கள் இருக்கும் வீதிகளில் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் நடைபெறும் பொது விழாக்களில் அல்லது பிரத்யேக நிகழ்வில் பங்கு பற்றி உங்களது நினைவுகளை மீட்டெடுத்து, மூளையின் இயங்குத்திறனை புத்தாக்கம் செய்யலாம்.

முதுமை வயதை எட்டியவுடன் சோர்வாக இருந்தாலும் மூளையின் ஆரோக்கியத்தை சீராக பராமரிப்பதில் உரிய கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில் மூளை சோர்வடைந்தால், எளிதில் மனச்சோர்வு ஏற்பட்டு, எதிர் நிலையான சிந்தனைகளின் ஆக்கிரமிப்பிற்குள்ளாகி, உடல் ஆரோக்கியம் மற்றும் மூளையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட கூடும்.

டொக்டர் ஸ்ரீதேவி, தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்சுலின் செலுத்திக்கொள்வதால் பக்க விளைவு உண்டாகுமா?

2025-03-25 15:50:06
news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18