ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் 'சிவலிங்கா' படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரினது வரவேற்பினை பெற்றுள்ளது.

பி.வாசு இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிப்பில் உருவான 'சிவலிங்கா' படத்தின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் இயக்குனர் பி.வாசுவே இயக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக 'இறுதிச்சுற்று' நாயகி ரித்திகா சிங் நடித்துள்ளார். இதேவேளை ஊர்வசி, வடிவேலு, உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் லாரன்ஸ் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துள்ளார்.