சம்பளமில்லாத விடுமுறையிலுள்ள அரச சேவையாளர்களுக்கு அடிப்படை சம்பளம் - ஜானக வகும்பர

Published By: Vishnu

04 Apr, 2023 | 12:29 PM
image

(எம்.ஆர் எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)

சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான அடிப்படை சம்பளத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளும் தீர்மானத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்பர தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் இன்று (04) செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வு கூடிய போது ஆளும் தரப்பின் உறுப்பினர் ஜகத் குமார சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்த அரச சேவையாளர்கள் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ளார்கள்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் விவகாரம் இழுபறி நிலையில் உள்ளதால் இவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இவ்விடயம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளோம்.

சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிகளை உள்ளடக்கிய வகையில் அடிப்படை சம்பளத்தை மாத்திரம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வழங்கப்படும்.

நகர சபைகள் மற்றும் பிரதேச சபை தேர்தல் கட்டளைச்சட்டத்தின் 102 ஆவது உறுப்புரையின் பிரகாரம் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ளவர்கள் தேர்தல் இடம்பெறும் வரை சேவையில் ஈடுபட முடியாது, ஆகவே அவர்களை மீண்டும் அரச சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36
news-image

தூய்மையான இலங்கைக்கான மக்கள் பணி" -...

2026-08-08 16:46:57
news-image

இலங்கைக்குக் கடத்த முயன்ற 297 கிலோ...

2026-08-08 16:52:24
news-image

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட...

2026-08-08 16:47:17
news-image

செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட...

2026-08-08 16:46:20
news-image

அல்லைப்பிட்டிச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து...

2026-08-08 16:39:43
news-image

விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் இரண்டு தமிழ்...

2026-08-08 16:22:27