லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு : புதிய விலைகள் 

Published By: Vishnu

04 Apr, 2023 | 12:14 PM
image

(எம்.மனோசித்ரா)

உலக சந்தையில் எரிவாயு விலை குறைவடைந்துள்ளமை , டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளமை மற்றும் விலை சூத்திரம் என்பவற்றின் அடிப்படையில் சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

அதற்கமைய செவ்வாய்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1005 ரூபாவாலும் , 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 402 ரூபாவாலும் , 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 183 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்கிழமை (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அதன்படி 4743 ரூபாவாகக் காணப்பட்ட 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 3738 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.

1904 ரூபாவாகக் காணப்பட்ட 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1502 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது. 

883 ரூபாவாகக் காணப்பட்ட 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 700 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவிலைகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் போது அவற்றை முறையாக முகாமைத்துவம் செய்ததன் காரணமாகவே இன்று மக்களுக்கு அதிக பட்ச பயனை வழங்க முடிந்துள்ளது.

அத்தோடு டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருகின்றமையும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலை குறைவடைந்தமை , ரூபாவின் பெறுமதி உயர்வடைந்தமை மற்றும் நிதி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட விலை சூத்திரம் என்பவற்றின் அடிப்படையில் வரலாற்றிலேயே பாரியளவிலான விலை குறைப்புக்கள் இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய எதிர்வரும் காலங்களில் எரிவாயு விலைகளை இதே மட்டத்தில் அல்லது இதனை விடக் குறைவான மட்டத்தில் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டு அண்மித்துள்ள இந்தக் காலப்பகுதியில் இவ்வாறு பாரியளவிலான சலுகையை மக்களுக்கு வழங்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது.

லிட்ரோ நிறுவனம் நஷ்டமடைந்து இந்த விலை குறைப்புக்களை நடைமுறைப்படுத்தவில்லை. நான் இருக்கும் வரை இந்நிறுவனம் ஒருபோதும் நஷ்டமடையாது. 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் லிட்ரோ நிறுவனம் நியாயமான சிறய இலாபத்துடனேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அதே வேளை , மறுபுறம் நிறுவனத்தின் இலாபத்தையும் தக்க வைத்துக் கொள்ளும் வகையிலேயே நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

அடுத்த விலை திருத்தத்தின் போது விலைகளில் மாற்றங்களில் எவ்வாறிருக்கும் என்பதை இப்போதே ஊகிக்க முடியாது. எனினும் விலைகளை இதே மட்டத்தில் பேணுவதற்கு அல்லது இதனை விட குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ரூபாவின் பெறுமதி உயர்வடைவதன் அடிப்படையில் மேலும் விலை குறைவடையும் என எதிர்பார்க்கின்றோம்.

2024 வரையான எரிவாயு முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. இனியொரு போதும் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாது. விலை குறைப்பின் அடிப்படையில் எரிவாயுவிற்கான கேள்வி அதிகரிக்கும் என்பதால் , அதற்கேற்ப முற்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு...

2025-03-21 21:19:44
news-image

ச.தொ.ச. நிவாரண பொதியில் ஏன் தனியார்...

2025-03-21 21:20:24
news-image

வேட்புமனு நிராகரிப்பு எதிராக சட்டநடவடிக்கை

2025-03-21 22:55:26
news-image

இலஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை சத்தியக்கடதாசி...

2025-03-21 21:26:25
news-image

நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண்...

2025-03-21 22:20:56
news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10