வளர்ந்து வரும் நவீன தொழிற்நுட்பத்திற்கேற்ப வானொலி துறையை விரிவுபடுத்துவதற்காக, உலகில் முதல் நாடாக வானொலி சேவையை தடை செய்தது நோர்வே. 

நவீன தொழிநுட்பத்திற்கு ஏற்ப நாட்டு மக்களை வழி நடத்தவேண்டும் எனும் நோக்கிலேயே நேர்வே அரசாங்கம் நாடுபூராகவும் உள்ள நவீன தொழிநுட்பமயமற்ற வானொலி நிலையங்கள் அனைத்தையும் இடைநிறுத்தியுள்ளது.

நேர்வேயில் இது வரை சுமார் 20 இலட்சம் வாகனங்களில் தொழிநுட்பவிருத்தி மிகு சாதனங்கள் பொருத்தப்படவில்லை. எதிர்காலத்தில் நவீனமயப்படுத்துவதற்கு சுமார் 29 மில்லியன் டொலர்கள் செலவிடப்படவுள்ளது. 

தற்போது பாவனையில் உள்ள வானொலியின் அதே செலவில் 8 மடங்கு அதிக தெளிவான ஒலியை வெளிப்படுத்தக்கூடிய ஊடகத்தை நாட்டிற்குள் விரிவுபடுத்துவதற்காகவே, குறித்த திட்டங்கள் நடைமுறைக்க வருவதாக அந்நாட்டு நவீன தொழிநுட்பமயப்பட்ட வானொலியின் தலைமை அதிகாரி ஒலே ஜோர்ஜன் டோவ்மார்க் தெரிவித்துள்ளார். 

மேலும் குறித்த திட்டத்துடன் எதிர்காலத்தில் இங்கிலாந்து, டென்மார்க் மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகள் இணைவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நாடுகளுக்கு முன்னுதாரணமாக நேர்வேயின் குறித்த திட்டம் விளங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது