ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை பணம்கொடுத்து வாங்க எந்த தேவையும் இல்லை - ஐ.தே.க

Published By: Digital Desk 5

04 Apr, 2023 | 03:12 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்த எங்களுக்கு எந்த தேவையும் இல்லை. ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயமாக செயற்படும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. 

அத்துடன் பணம் கொடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதாக ஆதாரம் இருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அதுதொடர்பில் முறையிடட்டும் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் திங்கட்கிழமை (03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்த  அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார். எந்த அரசியல் கட்சியையும் பிளவுபடுத்த எங்களுக்கு எந்த தேவையும் இல்லை.  பணம்கொடுத்து விலைக்கு வாங்க தற்போதைய நிலையில் அரசாங்கம் இல்லை. 

அவ்வாறு பணம் கொடுப்பது தொடர்பாக ஆதரம் இருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரதேமாச அதுதொடர்பில் முறையிடலாம். ஆனால் பாராளுமன்ற  உறுப்பினர்கள் சுயமாக சிந்தித்து செயற்படும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது.

அத்துடன் நாட்டின் எதிர்காலத்துக்காக அனைவரும் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என ஜனாதிபதி தொடர்ந்து தெரிவித்து வருகிறார். அதனால் நாடு தொடர்பில் ஆர்வம் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முன்வருவதை தடுக்க முடியாது. 

எதிர்க்கட்சியில் இருந்த ஹரின் பெர்ணாந்து, மனுஷ நாணயக்கார ஆகியோரும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை நம்பியே  அரசாங்கத்தில் இணைந்துகொண்டு சிறந்த முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்கின்றனர். 

அதேநேரம் எதிர்க்கட்சில் இருந்து அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முன்வருபவர்கள் பதவிகளை பதவிகளை பொறுப்பெடுக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. அவர்கள் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்கும் போது நாட்டின் பணவீக்கம் பாரியளவில் அதிகரித்து இருந்தது. உலகில் அதிக பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இருந்தது. 

குறிப்பாக வெனிசுலா, சிறியா,சிம்பாப்வே லெபனான் நாடுகளுடனே நாங்களும் இருந்தோம். லெபனானில் மக்கள் வங்கிகளை உடைத்து பணம் கொள்ளையிடுகின்றனர். இந்த நிலைக்கே இலங்கையும் சென்றுகொண்டிருந்தது. 

ஆனால் இன்று அந்த நிலை மாறி இருக்கிறது. பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுவரும் வேலைத்திட்டமே இதற்கு காரணமாகும். இதனை தற்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உணர்ந்து வருகின்றனர். 

அத்துடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக ரணில் விக்ரமசிங்க எடுத்த சில தீர்மானங்களால் மக்களின் பொருளாதாரம் பாரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். 

என்றாலும் இது குறுகிய காலத்திற்காகும். எதிர்வரும் காலங்களில் இதற்கு படிப்படியாக தீர்வு கிடைக்கும் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று அடுத்த மாதளவில் வங்கிகளின் வட்டி வீதத்தை நூற்றுக்கு 15 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கு மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடி இருக்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளிலுள்ள ஆபத்தான கட்டிடங்கள் மற்றும் மரங்களை...

2023-12-11 21:18:06
news-image

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத்...

2023-12-11 20:57:33
news-image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50...

2023-12-11 21:36:10
news-image

நியாயமான வரிக்கொள்கையையே எதிர்பார்க்கிறோம் - நாமல்

2023-12-11 18:26:32
news-image

இந்தியத் தூதரை சந்திக்க வடக்கு எம்.பி.க்களுக்கு...

2023-12-11 18:22:58
news-image

தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை...

2023-12-11 13:48:37
news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17