எதிர்க்கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தவே அரசாங்கம் முன்னுரிமையளிக்கிறது - திஸ்ஸ அத்தநாயக்க

Published By: Digital Desk 3

03 Apr, 2023 | 03:46 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றுள்ளமையால் எமது வெளிநாட்டு கடன்  53 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

இது பட்டாசு கொளுத்தி கொண்டாட வேண்டிய விடயமல்ல. இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து நாட்டை மீட்பதை விடுத்து அரசாங்கம் கட்சிகளுக்குள் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

திங்கட்கிழமை (3) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் அதன் தோல்வியை மறைப்பதற்காகவே எம்மில் பலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகக் கூறுகின்றனர். அவ்வாறு ஒருபோதும் இடம்பெறப் போவதில்லை.

அரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். ஆனால் அரசாங்கத்துடன் ஒருபோதும் இணைய மாட்டோம். அரசாங்கத்திலுள்ள பலர் வெகு விரைவில் எம்முடன் இணைவர்.

ஒருபுறம் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசாங்கம் மறுபுறம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை நடைமுறைப்படுத்தி மக்களின் குரலை முடக்குவதற்கு முற்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்கள் என எவற்றையுமே நடத்துவதற்கு இடமளிக்காத வகையிலேயே இந்த சட்ட மூலத்தை  அரசாங்கம் தயாரித்துள்ளது.

பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் சந்தேகநபரொருவரை தடுத்து வைக்க வேண்டுமெனில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் அவ்வாறு எந்த ஏற்பாடுகளும் இல்லை.

சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றுள்ளமையால் எமது வெளிநாட்டு கடன்  53 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

இது பட்டாசு கொளுத்தி கொண்டாட வேண்டிய விடயமல்ல. கடந்த 3 மாதங்களுக்குள் சுமார் 2 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டில் மாத்திரம் 700 வைத்தியர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். இவ்வாறு நாட்டு பிரஜைகள் வெளியேறுவதை முதலில் தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து கட்சிகளுக்குள் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடும் ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து

2025-01-20 21:22:53
news-image

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர்...

2025-01-20 20:33:04
news-image

ஊடகத்துறையின் அபிவிருத்திக்காக ஊடக நிறுவனமொன்று நிறுவப்படும்...

2025-01-20 16:25:38
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

2025-01-20 17:25:36
news-image

சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை...

2025-01-20 16:27:53
news-image

போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை...

2025-01-20 16:47:30
news-image

06 கோடியே 63 இலட்சம் ரூபா...

2025-01-20 15:55:37
news-image

அம்பாறையில் சேனாநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான்கதவுகள்...

2025-01-20 15:50:47
news-image

ரயில் பயணத்தை கண்காணிக்க மக்களோடு மக்களாக...

2025-01-20 15:44:31
news-image

கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் வெடிப்புச்...

2025-01-20 15:22:49
news-image

யாழில் தமிழ்மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை...

2025-01-20 15:23:27