திடீர் தீ விபத்தில் வீடொன்று முற்றாக எரிந்து நாசம் : அம்பகமுவ பகுதியில் சம்பவம்

Published By: Ponmalar

07 Jan, 2017 | 03:52 PM
image

(க.கிஷாந்தன்)

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட  கினிகத்தேனை – அம்பகமுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடொன்று தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

வீட்டில்  இருந்த 5 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ ஏற்பட்ட போது வீட்டில் இவர்கள் நித்திரை கொண்டிருந்ததாகவும், பிறகு  எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு  அயலவர்கள் தீயை அணைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள்,  உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

இதேவேளை இது தொடர்பாக கினிகத்தேனை பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய மீனவர்களில் இருவருக்கு 6 மாத...

2025-03-19 15:48:10
news-image

“Clean Sri Lanka” வின் கீழ்...

2025-03-19 15:47:23
news-image

காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியை...

2025-03-19 15:21:56
news-image

யானைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட நபரை மீட்ட வன...

2025-03-19 15:38:12
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கும் ஜேர்மனிய...

2025-03-19 15:01:24
news-image

இந்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர் சங்க...

2025-03-19 15:45:12
news-image

25 சதவீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியை...

2025-03-19 14:27:13
news-image

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது...

2025-03-19 14:15:59
news-image

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

2025-03-19 14:24:30
news-image

குடும்பத்துடன் யாழ் சென்று திரும்பிய களனி...

2025-03-19 14:17:57
news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32