(எஸ்.என்.நிபோஜன்)

நீ உருப்பட மாட்டாய் என்றாா் அதிபா், அதுவே எனக்கு சவாலக அமைந்தது என உயிரியல் தொழிநுட்ப பிாிவில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை பெற்ற கிளிநொச்சி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன் தெரிவித்துள்ளார்.

இவா் கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு எனும் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்தவா்.இவர் ஒரு   கூலித் தொழிலாளியின் மகன்.

இன்று  ஊடகவியலாளர்களின்  செவ்விக்கு  கருத்து தெரிவித்த போது தான் ஆரம்ப கல்வி கற்ற பாடசாலையில் எள்ளுகாட்டில் இருந்து செல்பவா்களை ஏளனமாகவே பாா்ப்பது வழமை எள்ளுக்காட்டில் உள்ளவா்கள் படிக்கத் தெரியாதவா்கள் என்றெல்லாம் கூறுவாா்கள்.

க.பொ.த சாதாரணதரம் பரீட்சை எழுதிவிட்டு உயிரியல் தொழிநுட்ப பிாிவில் உயா்தரம் கற்பதற்காக இந்துக் கல்லூரிக்கு செல்வதற்காக சென்றபோது அதிபா் நீ உருப்பட மாட்டாய் என்றுக் கூறியே அனுப்பி வைத்தாா். என கண்கள் கலங்க தெரிவித்துள்ளார்.  அதுவே எனக்கு சவாலக அமைந்தது  ஆனாலும்  அது  எனக்கு  இன்னமும்  வலிக்கிறது  இதே  போல்  யாரையும்  திட்டாதீர்கள்  என கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்