(நெவில் அன்தனி)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக ஹைதராபாத் ராஜிவ் காந்தி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சகலதுறைகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய ராஜஸ்தான் றோயல்ஸ் 72 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது.
முன்வரிசை வீரர்களான யஷஸ்வி ஜய்ஸ்வால், 2022 ஐபிஎல் ஹீரோ, ஜொஸ் பட்லர், அணித் தலைவர் சஞ்சு செம்சன் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் யுஸ்வேந்த்ர சஹாலின் 4 விக்கெட் குவியலும் ராஜஸ்தான் றோயல்ஸின் வெற்றிக்கு அடிகோலின.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 203 ஓட்டங்களைக் குவித்தது. இந்த மொத்த எண்ணிக்கை இந்த ஐபிஎல் போட்டி ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.
இம்பெக்ட் வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால், ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 35 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
பட்லர் 22 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களையும் யஷஸ்வி ஜய்ஸ்வால் 37 பந்துகளில் 7 பவுண்டறிகளுடன் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.
தொடர்ந்து ஜய்வாலுடன் 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்த சஞ்சு செம்சன் 32 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 55 ஓட்டங்களைக் குவித்தார்.
மத்திய வரிசையில் ஷிம்ரன் ஹெட்மியர் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் தங்கராசு நடராஜன் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் இம்பெக்ட் வீரர் பஸால்ஹக் பாறூக்கி 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
204 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது.
துடுப்பாட்டத்தில் மயான்க் அகர்வால் (27), இம்பெக்ட் வீரர் அப்துல் சமாத் (32 ஆ.இ.), ஆதில் ராஷித் (18), உம்ரன் மாலிக் (19 ஆ.இ.) ஆகிய நால்வரே 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பந்துவீச்சில் யுஸ்வேந்த்ர சஹால் 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ட்ரென்ட் போல்ட் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இம்பேக்ட் பந்துவீச்சாளர் நவ்தீப் சய்னி 2 ஓவர்களில் 34 ஓட்டங்களைக் கொடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM