புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை இம் மாதத்துக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முயற்சிப்போம் - நீதி அமைச்சர்

Published By: M.Priyanka

03 Apr, 2023 | 03:37 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் உயிரை பாதுகாப்பதற்கே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கொண்டு வந்திருக்கிறோம்.

மாறாக மக்களின் உரிமைகளை மீறும் எந்த விடயங்களும் அதில் இல்லை. அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை  இந்த மாதத்துக்குள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முயற்சிப்போம்.

கண்டி பல்லேகலயில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடொன்றில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டுவருவதற்கு அந்த நாட்டில் பயங்கரவாதம் இருக்கவேண்டும் என்று இல்லை. அமெரிக்கா,பெரிய பிரித்தானியா,ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இருக்கின்றது.

அதற்காக அந்த நாடுகளில் பயங்கரவாதம் இருப்பதாக தெரிவிக்க முடியாது. பயங்கரவாதம் எப்போது ஏற்படும் என்பதை சாஸ்திரம் சொல்பவருக்கு தீர்மானிக்க முடியாது.

அதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பு, மக்களின் உயிரை பாதுகாப்பதற்கு எப்போதும் அரசாங்கம் தயாராக இருக்கவேண்டும். அதனை செய்ய முடியாவிட்டால் அது  அரசாங்கம் அல்ல.

அத்துடன் தற்போது அரசாங்கம் கொண்டுவர இருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்பு என்றால். புதியதை விட்டு, தொடர்ந்து இருக்கும் சட்டத்தை கொண்டுசெல்லவேண்டும். அல்லது, நாட்டின் தேசிய பாதுகாப்பு, மக்களின் உயிர் என்னவானாலும் பரவாயில்லை, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை முற்றாக இல்லாமலாக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை 20இலட்சம் ரூபா கொந்தராத்து அடிப்படையில் கிளைமோர் குண்டு வழங்கி கொலை செய்வதற்கு தமிழ் பயங்கரவாத குழுவொன்று செயற்பட்டிருந்தது. அவர்களும் தற்போது சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.  தனது பாதுகாப்புக்காக மக்களை சிறையில் வைத்துக்கொண்டு, இவ்வாறான சட்டம் தேவையில்லை என சுமந்திரன் எம்.பியும் தெரிவிக்கிறார்.

அதனால் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைவிட சிறந்த ஒன்று இருப்பதாக யாரும் தெரிவித்தால், அதுதொடர்பில் நாங்கள் ஆராய்ந்து பார்ப்போம். இறுதியில் நாட்டு மக்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பாக தீர்மானம் எடுப்பது, என்.ஜீ.ஓக்களோ அல்லது அரசியல் கட்சிகளோ இல்லை. உயர் நீதிமன்றமாகும். 

அதனால் புதிய பயங்கரவாத சட்டமூலம் மக்களின் உரிமையை மீறுகின்ற சட்டமூலம் என யாருக்கு வேண்டுமானாலும் உயர் நீதிமன்றில் முறையிடலாம். இரண்டு வார காலம் இருக்கிறது. யாராவது இந்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றம் செல்வதாக இருந்தால், அவர்களுக்கு சட்டத்தரணிகளின் உதவிகளை வழங்க நாங்கள் தயார்.

அத்துடன் இந்த புதிய சட்டமூலத்தில் தொழிற்சங்கங்களை அடக்குவதற்கு எந்த சரத்தும் இல்லை. ஆனால் தொழிற்சங்க போராட்டத்தின்போது சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக இருந்தால், அதனை சாதாரண சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும். அந்த சட்டம் தற்போதும் அமுலில் இருக்கிறது. 

ஆனால் தொழிற்சங்கங்கள் பயங்கரவாத செயலில் ஈடுபடும்  நோக்கில் செயற்படுமாக இருந்தால்தான் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அவர்களுக்கு எதிராக செயற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு...

2026-09-16 14:56:41
news-image

நாமல் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

2026-09-16 14:56:09
news-image

யாழ். களப்பில் 9,000 கடல் அட்டைகளுடன்...

2026-09-16 14:55:03
news-image

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை உட்பட சட்டவிரோத செயற்பாடுகள்...

2026-09-16 14:52:16
news-image

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் நாமல்...

2026-09-16 14:14:14
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத வெளிநாட்டு...

2026-09-16 13:51:46
news-image

மட்டக்களப்பில் சிவஞானம், சுமந்திரன் உட்பட 4...

2026-09-16 12:46:18
news-image

அழைப்பாணையை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை...

2026-09-16 12:49:25
news-image

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்காத...

2026-09-16 13:12:57
news-image

மாத இறுதிக்குள் வருமான வரியைச் செலுத்துங்கள்...

2026-09-16 12:44:59
news-image

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் முழுவதையும் வற்றச்...

2026-09-16 12:12:13
news-image

ஞானசார தேரர் மீதான வழக்கு செப்டெம்பர்...

2026-09-16 12:21:37