தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்காவிட்டால் தமது பணிப்பகிஷ்கரிப்பு விஸ்தரிக்கப்படும்  மாவட்ட பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது கண்டி மாவட்டத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த ஆர்ப்பாட்டம் மத்திய மாகாணம் முழுவதும் மேற்கொள்ள நேரிடும் என சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் மஹிந்த லியனகே தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளரின் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.