ரஷ்யா இணைய மோசடியில் ஈடுபட்டது உண்மையே : அமெரிக்க புலனாய்வு பிரிவு 

Published By: Selva Loges

07 Jan, 2017 | 02:16 PM
image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா மற்றும் விக்கிலீஷ் இணைந்து இனைய குற்றத்தில் ஈடுப்பட்டமை உண்மையென அந்நாட்டு புலனாய்வுத்துறை தலைவர் ஜேம்ஸ் கிளாப்பர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த  டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, இவர்  எதிர்வரும் 20 ஆம் திகதி பதவி ஏற்கவுள்ள நிலையில் தற்போது குறித்த குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது.

குறித்த விவகாரத்தில் ரஷ்யாவின் நோக்கங்கள் குறித்த அறிக்கையை புலனாய்வுத்துறை தலைவர் ஜேம்ஸ் கிளாப்பர்  அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிடம் வழங்கியுள்ளார்.

விசாரணை முடிவுகள் குறித்து ஜேம்ஸ் கிளாப்பர் வெளிப்படுத்தியுள்ளதாவது, "அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளதற்கான ஆதரங்கள் நிரூபணமாகியுள்ளது. இருப்பினும் ரஷ்யாவின் தலையீடு அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதா? என்பதை தங்களால் கூறமுடியாதுள்ளது. ஆயினும் ரஷ்யா அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்பது உண்மையாகும்." எனக்கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் விடயம் குறித்த  கேள்விகளுக்கு விரிவான விளக்கத்தை ஜேம்ஸ் கிளப்பர் அளிக்க மறுத்துள்ளார். இது குறித்து  வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறியுள்ளதாவது, "ரஷ்யா மீதான புலனாய்வுத் துறையின் விசாரணைகள் யாவும் வெளிப்படையானது என அமெரிக்க அதிபர் ஒபாமா நம்புகிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த இணையமோசடி  விவகாரம் தொடர்பான அறிக்கைகள்  அமெரிக்காவின்  புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள  டிரம்ப்பிடம் விளக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03
news-image

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில்...

2025-03-18 12:56:05
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு சில...

2025-03-18 12:40:45
news-image

இஸ்ரேல் காசா மீது மீண்டும் கடும்...

2025-03-18 10:46:07
news-image

தடை செய்யப்பட்ட 67 பயங்கரவாத அமைப்புகள்:...

2025-03-18 10:20:54
news-image

கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட...

2025-03-17 15:27:25
news-image

ஹமாஸிற்கு ஆதரவளித்ததால் விசா ரத்து: அமெரிக்காவில்...

2025-03-17 13:09:43
news-image

வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை மூடுவதற்கு டிரம்ப்...

2025-03-17 11:06:21