கணினி குற்றங்களுக்கு திட்டமிடல் : 38 சீனப் பிரஜைகள் அளுத்கமவில் கைது! 

Published By: Vishnu

02 Apr, 2023 | 03:57 PM
image

கணினி குற்றங்களை மேற்கொள்ள  திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் சீனப் பிரஜைகள் 38 பேர் நேற்று சனிக்கிழமை (1 ) கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

நிதி மோசடி தொடர்பான கணினி குற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் குறித்த சீனப் பிரஜைகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சீன தூதரகத்தின் உதவியுடன் இந்தச்  சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 33 ஆண்கள், 5 பெண்களும் அடங்குவர்.   

சந்தேக நபர்கள் வசமிருந்த 40 மடிக்கணினிகள், 120 கையடக்கத் தொலைபேசிகள், பல கணினி உபகரணங்கள் மற்றும் பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேகநபர்கள் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2050-க்குள் ஆசியா பொருளாதார மையமாகும்; இலங்கை...

2026-07-16 16:59:30
news-image

சிறைச்சாலைத் திணைக்களத்தில் புதிய ஆட்சேர்ப்பு, சேவை...

2026-07-16 13:15:11
news-image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க...

2026-07-16 16:07:33
news-image

சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டமை...

2026-07-16 16:08:27
news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 16:14:53
news-image

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை...

2026-07-16 21:56:39
news-image

கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல்...

2026-07-16 21:52:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : கைதிகளின்...

2026-07-16 19:10:42
news-image

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக...

2026-07-16 21:33:34
news-image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு...

2026-07-16 19:10:22
news-image

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 6...

2026-07-16 21:19:42
news-image

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-07-16 19:09:32