வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் மீள் பிரதிஷ்டை : பின்வாங்கிய அமைச்சர்கள்  

Published By: Nanthini

02 Apr, 2023 | 05:50 PM
image

வெடுக்குநாறி மலையில் சிதைக்கப்பட்ட விக்கிரகங்கள் இன்றைய தினம் (2) மீண்டும் வைக்கப்படும் என்று உறுதியளித்திருந்த அமைச்சர்கள், நீதிமன்றில் வழக்கு இருப்பதால் அது தொடர்பாக பின்னர் தீர்மானிப்போம் என்று அதிலிருந்து பின்வாங்கியுள்ளனர்.

அண்மையில் வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஷ்வரர் ஆலய வளாகத்தில் இருந்த தெய்வ சின்னங்கள் அழிக்கப்பட்டிருந்தன.  

இதனையடுத்து ஆலயத்தின் நிர்வாகத்தினரால் நெடுங்கேணி பொலிஸ் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், அமைச்சர்களான டக்ளஸ், ஜீவன் தொண்டமான், மற்றும் ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கடந்த வாரம் சர்வமத தலைவர்களின் பங்களிப்புடன் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டது. 

அதன் பிரகாரம், முன்னர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் மீண்டும் சிவலிங்கம் உட்பட சேதப்படுத்தப்பட்ட விக்கிரகங்களை வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று (2) அதிகாலை விக்கிரகங்களை மீள் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 

எனினும், நேற்று (1) ஆலய நிர்வாகத்தினரை மீறி ஆலய வளாகத்தில் பிரதிஷ்டை நிகழ்வுக்கான பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன், விக்கிரகங்களை நிலைநிறுத்தும் நிர்வாகத்தின் எண்ணம் ஈடேறாமல் போய்விட்டது. 

இதேவேளை இன்று விக்கிரகங்கள் நிச்சயம் வைக்கப்படும் என்று அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அனைத்து தரப்புக்கும் உறுதிபட தெரிவித்திருந்தனர்.  

அந்த வகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கு. திலீபன், ம. ராமேஸ்வரன் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் இன்றைய தினம் காலை ஆலயத்துக்கு வருகை தந்திருந்தனர்.

எனினும், நீதிமன்றில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது விக்கிரகங்களை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் கலந்துரையாடி, இது தொடர்பாக தீர்மானிக்க முடியும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். 

அவர்களது கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

நீங்கள் 'சிலைகளை வைப்போம்' என்று அறிக்கை விட்டபோது நீதிமன்றில் வழக்கு இருப்பது தெரியவில்லையா என ஊடகவியலாளர்களால் அமைச்சர்களிடம் கேட்கப்பட்டபோது அதற்குரிய பதில் அவர்களால் வழங்கப்படவில்லை. 

ஆகவே, இன்றைய தினம் எப்படியும் விக்கிரகங்களை வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த ஆலய நிர்வாகத்தினர் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளனர். 

அத்துடன் நேற்று ஒரு சிலர் எடுத்த தன்னிச்சையான முடிவுகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது எம்மை ஏமாற்றும் செயற்பாடாகவே இருக்கிறது என ஆலய நிர்வாகத்தினர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41