வெடுக்குநாறி மலைக்கு இன்று (2) விஜயம் செய்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், உரிய ஆவணங்களையும் கோரியுள்ளார்.
அந்த ஆவணங்கள் கிடைத்த பின்னர், விக்கிரகங்கள் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, இப்பிரச்சினை சுமுகமாக தீர்த்து வைக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி மலைக்கு களப் பயணம் மேற்கொண்ட ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் முதலில் வழிபாட்டில் ஈடுபட்டனர். அதன் பின்னர் ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.
இதன்போது நிர்வாகத்தினரிடம் ஆலயம் தொடர்பான ஆவணங்கள் ஏதும் இருக்கவில்லை. எனவே, அவற்றை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் கூறியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் இருப்பதால், சட்டத்துக்கு மதிப்பளித்து, தீர்ப்பு வெளியான பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலயத்துக்கு ஜீவன் தொண்டமானுடன் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, இ.தொ.கா தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், ஈபிடிபியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள், பாபு சர்மா உட்பட பலர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை (3) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திலும் ஜீவன் பங்கேற்கவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM