வெற்றி நடிக்கும் 'பம்பர்' படத்தின் முதல் பாடல் வெளியீடு

Published By: Digital Desk 5

01 Apr, 2023 | 05:25 PM
image

நடிகர் வெற்றி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'பம்பர்' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'குடி குடி தூத்துக்குடி குடி..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் எம். செல்வக்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பம்பர்'. இதில் வெற்றி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஷிவானி நாராயணன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஹரிஷ் பெராடி, ஜி. பி. முத்து, தங்கதுரை, கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேதா பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். தியாகராஜா மற்றும் டி. ஆனந்த ஜோதி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற 'குடி குடி தூத்துக்குடி குடி தாமிரபரணி விளையாடும் ஊரடி...' எனத் தொடங்கும் பாடல் வெளியாகி இருக்கிறது. 

இந்தப் பாடலுடன் பாடலுக்கான காணொளியும் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுத பிரபல பின்னணி பாடகர் கபில் கபிலன் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். றாப் மற்றும் துள்ளலிசையுடன் இணைந்து உருவாகி இருக்கும் இந்த பாடல் இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35