'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் முதல் தமிழ் இணைய தொடர்

Published By: Digital Desk 5

01 Apr, 2023 | 05:27 PM
image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத முதல் தமிழ் இணைய தொடரின் படப்பிடிப்பு பூஜையுடன் மதுரைக்கு அருகே உள்ள உசிலம்பட்டியில் தொடங்கியது.

'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை', 'கடைசி விவசாயி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எம். மணிகண்டன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத முதல் தமிழ் இணைய தொடரில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தத் தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்யும் இந்த இணைய தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கும் இந்த இணையத் தொடரை செவன் சி'ஸ் என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ஆறுமுக குமார் தயாரிக்கிறார்.

இதனிடையே 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இந்தி இணைய தொடரான ' ஃபார்ஸி' இந்திய அளவில் அதிக பார்வையாளர்களால் பார்வையிடப்பட்ட இணைய தொடர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறது என்பதும், இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி 'ஆண்டவன் கட்டளை', 'கடைசி விவசாயி' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் என்பதும், இருவரும் இணைந்து தமிழில் உருவாக்கும் முதல் இணைய தொடர் இது என்பதாலும் இதற்கான எதிர்பார்ப்பு டிஜிட்டல் தளப் பார்வையாளர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் ஆதி நடிக்கும் 'சப்தம்' படத்தின்...

2023-09-27 14:40:50
news-image

தன் பாலின சேர்க்கையாளர்களின் காதலை உரக்கப்...

2023-09-27 14:41:11
news-image

தளபதி விஜயின் 'லியோ' பட இசை...

2023-09-27 14:43:36
news-image

சிறிய முதலீட்டில் தயாராகி இருக்கும் 'எனக்கு...

2023-09-26 17:25:37
news-image

மணிரத்னம், கமல்ஹாசன் பாராட்டிய சித்தார்த்தின் 'சித்தா'

2023-09-26 15:57:08
news-image

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும்...

2023-09-26 17:23:44
news-image

இரட்டைச் சாதனை படைத்திருக்கும் ஒரே இந்திய...

2023-09-26 14:51:25
news-image

வித்தியாசமாக உருவாகி இருக்கும் 'இறைவன்'

2023-09-25 13:12:03
news-image

அருண் விஜய் நடிக்கும் 'வணங்கான்' பட...

2023-09-25 13:11:28
news-image

ஒக்டோபரில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் 'அயலான்' பட...

2023-09-25 11:46:27
news-image

தளபதி விஜயின் 'லியோ' பட அப்டேட்

2023-09-23 16:21:24
news-image

திரிஷா நடிக்கும் 'தி ரோடு' படத்தின்...

2023-09-22 16:11:42