மீண்டும் பழைய யுகத்திற்கே மக்கள் செல்ல நேரிடும் - பாலித ரஞ்கே பண்டார

Published By: Digital Desk 5

01 Apr, 2023 | 05:28 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐ.தே.க.வை தோல்வியடைச் செய்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாட்டு மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மக்கள் ஐ.தே.க.வுக்கு வாக்களிக்காவிட்டால் மீண்டும் பழைய யுகத்திற்கே செல்ல நேரிடும் என அதன் பொதுச் செயலாளர் பாலித ரஞ்கே பண்டார தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஐக்கிய மக்கள் சக்தியும் , ஜே.வி.பி.யும் மின விரைவாக சரிவை சந்தித்துள்ளன. இனிவரும் நாட்களில் ஐக்கிய மக்கள் சக்தியில் அதன் தலைவரும் பொதுச் செயலாளரும் மாத்திரமே எஞ்சுவர். தேர்தலை நடத்துவதில் காணப்படும் பிரதான தடை நிதி நெருக்கடியாகும். எனவே பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டதன் பின்னர் தேர்தல் இடம்பெறும்.

பொறுப்பை ஏற்பதற்கு அஞ்சி ஓடியவர்களுக்கு மத்தியில் தனி நபராக ஆட்சியைப் பொறுப்பேற்று இன்று ஜனாதிபதி வெற்றி பெற்றுள்ளார். எனவே சில்லறை தேர்தல்களை நடத்திக் கொண்டிருப்பதை விட ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பொறுத்தமானது. அதன் ஊடாக சவாலை ஏற்கக் கூடியவர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டை ஒப்படைக்க முடியும்.

இன்று நாட்டில் 28 இலட்சம் குடும்பங்கள் உண்பதற்கு உணவைப் பெற்றுக் கொள்வதில் கூட கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. அவ்வாறிருக்கையில் தேர்தலை நடத்துவதன் மூலம் இவர்களுக்கு உணவை வழங்க முடியுமா? ஜே.வி.பி., ஐ.ம.ச. குறித்து வீணாகக் கலவரமடையத் தேவையில்லை.

தேர்தலில் போட்டியிடவுள்ள கூட்டணிகள் முக்கியத்துவமுடையவையல்ல. மாறாக தேர்தலில் போட்டியிடும் நபர் யார் என்பதற்கே முக்கியத்துவமளிக்க வேண்டும். அனைவரையும் ஒன்றிணைந்து அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதே எமது இலக்காகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே இதனை செய்ய முடியும்.

அடுத்து வரும் எந்தவொரு தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். காரணம் ஐ.தே.க.வை தோல்வியடைச் செய்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாட்டு மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் ஐ.தே.க.வுக்கு வாக்களிக்காவிட்டால் மீண்டும் பழைய யுகத்திற்கே செல்ல நேரிடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02
news-image

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு...

2023-06-04 13:24:16
news-image

தெஹியத்தகண்டி பிரதேச ஆற்றில் நீராடிய இருவர்...

2023-06-04 13:13:28
news-image

யாழ். பல்கலையில் மோதல் : 31...

2023-06-04 13:02:15
news-image

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் - ஜனாதிபதியிடம்...

2023-06-04 12:23:12
news-image

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை...

2023-06-04 12:14:40
news-image

16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை சிறைகளிலிருந்து...

2023-06-04 12:01:57