இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை தொடர்பில் விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் தீர்மானம் - அமைச்சர் டக்ளஸ்

Published By: Nanthini

01 Apr, 2023 | 05:29 PM
image

கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் கீழான சிறு போகச் செய்கை தொடர்பிலான தீர்மானங்கள் பெரும்பாலான விவசாயிகளின் கருத்துக்கள் பெறப்படாமல் எடுக்கப்பட்டுள்ளதாக தான் உணர்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடு குளத்தின் இவ்வாண்டுக்கான சிறுபோகச் செய்கை  தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களினால் பின்தங்கிய பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

குறிப்பாக, கல்மடுக் குளத்தின் கீழான விவசாயிகளுக்கு இரணைமடு குளத்தின் கீழ் 500 ஏக்கர் வழங்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பாக, கடந்த 27ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் விவசாயிகளுடனான கலந்துரையாடலில் இணைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அதனை தொடர்ந்து இன்றைய தினமும் (ஏப். 1) கலந்துரையாடலொன்று கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது சிறுபோக நெற்செய்கை மற்றும் இட ஒதுக்கீடுகள், நீர்ப்பங்கீடுகள் தொடர்பில் விவசாயிகளின் கருத்துக்களை பெறாமல், ஒரு சிலர், தன்னிச்சையாக முடிவெடுத்து, தங்கள் பயிர் செய்யும் உரிமைகளை தடுத்துள்ளனர் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கல்மடுக் குள விவசாயிகளுக்கு நீர்ப்பங்கீடுகள் வழங்கப்பட்டமை தொடர்பாகவும் உரையாடப்பட்டது. 

மேலும், காலபோக அறுவடை நிறைவு பெறுவதற்கு முன்னதாக கடந்த ஆண்டிலேயே சிறுபோக செய்கைக்கான கூட்டத்தினை கூட்டி தீர்மானங்கள் எடுத்தமை குறித்தும் விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அமைச்சர் கூறுகையில், 

பெரும்பாலான விவசாயிகளின் கருத்துக்கள் பெறப்படாமலேயே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாக உணர முடிகின்றது. எனவே, ஏனைய விவசாயிகளும் பாதிக்கப்படாத வகையிலேயே தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.

இக்கலந்துரையாடலில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா. தேவரதன், மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் கருணாநிதி, இரணைமடு நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ். செந்தில்குமரன், கமநல சேவை நிலையங்களின் பெரும்போக உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய வீட்டில் கோட்டாபய

2023-06-04 16:59:33
news-image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு...

2023-06-04 17:00:40
news-image

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு...

2023-06-04 16:55:10
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி...

2023-06-04 17:02:10
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02
news-image

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு...

2023-06-04 13:24:16
news-image

தெஹியத்தகண்டி பிரதேச ஆற்றில் நீராடிய இருவர்...

2023-06-04 13:13:28