ஒரு மாத வாடகை நிலுவை; பிரபஞ்ச அழகி மீது தாக்குதல்

Published By: Devika

07 Jan, 2017 | 01:27 PM
image

வீட்டு வாடகை ஒப்பந்தத்தை முறையாக இரத்துச் செய்யாததாலும், ஒரு மாத வாடகையைக் கொடுக்க மறுத்ததாலும் அழகு ராணி ஒருவர் மீது கட்டிட நிர்வாகிகள் தாக்குதல் நடத்தினர்.

டிஃபானி சமூகத்தின் சார்பில் 2016ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தவர் மில்லாநானின் சந்த்தேப். தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கின் ரச்சாதாபிசேக் வீதியில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் இவர் வசித்து வந்தார்.

கடந்த டிசம்பர் மாதத்துடன் அங்கிருந்து வெளியேறப்போவதாக கட்டிட நிர்வாகிகளிடம் தெரிவித்தார் சந்த்தேப். எனினும், இதுபற்றி ஒரு மாத காலத்துக்கு முன்னதாகவே அறிவித்தல் தரவில்லை என்பதால், ஜனவரி மாத வாடகையையும் சேர்த்துத் தர வேண்டும் என்று நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை அலட்சியம் செய்த சந்த்தேப், வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் கோபம் கொண்ட கட்டிட நிர்வாகிகள், சந்த்தேப்பின் வீட்டுக்குச் சென்று அவர் மீது சரமாரித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து, தற்காப்புக்காக கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் அவர்கள் மீது தூக்கியெறிந்து விரட்டினார் சந்த்தேப். பின்னர் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் அங்கு வந்த பொலிஸார் சந்த்தேப்பை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கட்டிட நிர்வாகிகளைக் கைது செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17