(எம்.மனோசித்ரா)
நாட்டில் மக்களின் உரிமையை மீறும் சர்வாதிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக தொழிற்சங்க பிரதிநிதிகள், மாணவர் சமூகம், பொது மக்களை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தெஹிவளையில் வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியல் சூழ்ச்சியின் மூலம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொழிற்சங்க பிரதிநிதிகள், மாணவர் சமூகம், பொது மக்கள் உள்ளிட்டோரை பயங்கரவாதத்தை ஒழிக்கும் பெயரில் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதே இதன் நோக்கமாகும்.
மக்களின் உரிமையை மீறும் சர்வாதிகாரம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை திசை திருப்புவதற்காக நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய இந்த அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி இணையவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார். அரசாங்கத்துடன் இணைய தயாராக உள்ள ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலா 2000 இலட்சம் ரூபாவை (200 மில்லியன்) வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அரசாங்கத்திலுள்ளவர்கள் வெளியேறி எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் , இவ்வாறு செயற்படுவதற்கு அரசாங்கத்திற்கு பித்து பிடித்துள்ளதா என்று தெரியவில்லை. இந்நிலையில் ஐ.ம.ச.வினர் 200 மில்லியனுக்காக தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை காட்டிக்கொடுப்பார் என நம்புகின்றீர்களா?
கடந்த 2020 பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையிலும் , 54 உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்த அப்பாவி மக்களுக்கு எவரும் துரோகமிழைக்க மாட்டார்கள். தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை எனக் கூறுபவர்கள் , தமது அரசாங்கத்தை பலப்படுத்திக் கொள்வதற்காக 200 மில்லியன் ரூபாவை செலவிடத் தயாராகவுள்ளனர்.
பணத்திற்கு அடிபணியும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மில் இல்லை. அவர்கள் அடிபணிவது மக்கள் ஆணைக்கு மாத்திரமே. எமது பாராளுமன்ற உறுப்பினர்களை முடிந்தால் பணம் கொடுத்து வாங்குங்கள் என சவால் விடுக்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM