தேர்தலை நடத்த டிசம்பர் வரை காத்திருக்க முடியாது - தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: Digital Desk 3

01 Apr, 2023 | 03:50 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு டிசம்பர் வரை காத்திருக்கும் நிலைப்பாட்டில் தேர்தல் ஆணைக்குழு இல்லை. கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே தேர்தலை நடத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான கலந்துரையாடல் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதோடு, நாளை மறுதினம் செவ்வாய்கிழமை ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில் பிரிதொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இம்மாதம் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்த போதிலும், குறித்த தினத்தில் திட்டமிட்ட படி தேர்தலை நடத்த முடியாது என மீண்டும் அறிவித்துள்ளது.

இது குறித்து எதிர்தரப்பினரால் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ஆணைக்குழு உறுப்பினர்களை அழைத்து பேசவுள்ளதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.

அத்தோடு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் டிசம்பருக்கு முன்னர் தேர்தல் இடம்பெறும் என்ற கருத்தினையும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே இவ்விடயங்கள் தொடர்பில் வினவிய போது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சி மன்றத்  தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன எம்மை அழைத்து கலந்துரையாடவுள்ளதாக அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதற்கமைய அடுத்த வாரம் இக்கலந்துரையாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

எவ்வாறிருப்பினும் இதுகுறித்து நாளை மறுதினம் செவ்வாய்கிழமை (4) தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நிதி நெருக்கடியானது தொடர்ந்தும் தேர்தலை நடத்துவதில் இடையூறாகக் காணப்பட்டால், அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்துவது இக்கலந்துரையாடலின் நோக்கமாக இருக்கும்.

தேர்தல்கள் தொடர்பில் அரசியல்வாதிகள் அவர்களின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயங்களைக் குறிப்பிட முடியும். அவர்களின் நிலைப்பாடு தொடர்பில் எமக்குத் தெரியாது. எது எவ்வாறிருப்பினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இயன்றவரை விரைவில் நடத்த வேண்டும் என்பதே நோக்கமாகும். இதற்காக நிதி மற்றும் ஏனைய வசதிகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அரசாங்கம் அதன் பொறுப்பினை நிறைவேற்றுமானால் , எமக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே தேர்தலை நடத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம். இதற்காக டிசம்பர் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஆணைக்குழு இல்லை என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02
news-image

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு...

2023-06-04 13:24:16
news-image

தெஹியத்தகண்டி பிரதேச ஆற்றில் நீராடிய இருவர்...

2023-06-04 13:13:28
news-image

யாழ். பல்கலையில் மோதல் : 31...

2023-06-04 13:02:15
news-image

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் - ஜனாதிபதியிடம்...

2023-06-04 12:23:12
news-image

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை...

2023-06-04 12:14:40
news-image

16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை சிறைகளிலிருந்து...

2023-06-04 12:01:57
news-image

ரயில் தடம் புரண்டதால் மலையகப் பாதையில்...

2023-06-04 11:39:35